மலையாள நடிகையிடம் பாலியல் அத்துமீறல் - ஐ.டி. மேலாளர் கைது!

 
விபின் நடிகையிடம் அத்துமீறல் விபின் நடிகையிடம் அத்துமீறல்

மலையாளத் திரையுலகில் பிரபலமான நடிகை ஒருவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக ஐ.டி. நிறுவன மேலாளர் ஒருவரைப் போலீசார் கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். 

கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த பிரபல மலையாள நடிகையிடம் சமூக வலைத்தளத்தில் ரசிகராக அறிமுகமாகி, பின்னர் அந்த வாலிபர், அடிக்கடி செல்போன் அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் அனுப்பித் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று நடிகை கொச்சி, கலூர் ஸ்டேடியம் பகுதியில் உள்ள ஒரு கடைக்கு டாட்டூ குத்துவதற்காகச் சென்றுள்ளார். இதை மோப்பம் பிடித்த அந்த வாலிபர், அங்கு நேரில் சென்று நடிகையை டாட்டூ குத்த வேண்டாம் என மிரட்டியுள்ளார். நடிகையை மிரட்டியதுடன் நிற்காமல், நடிகையைத் தவறான முறையில் தொட்டுப் பாலியல் அத்துமீறலிலும் ஈடுபட்டுள்ளார்.

பள்ளி மாணவி தற்கொலை!! கல்லூரி மாணவர் கைது.!!

இந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தை அடுத்து, பாதிக்கப்பட்ட நடிகை உடனடியாக பாலரிவட்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரைப் பெற்றுக்கொண்ட போலீசார் விரைந்து செயல்பட்டு அந்த வாலிபரைக் கைது செய்தனர்.

போலீசாரின் விசாரணையில் அவர் கத்ரிக்கடவு பகுதியைச் சேர்ந்த விபின் ராய் என்பது தெரியவந்தது. இவர் எம்.பி.ஏ பட்டதாரி என்பதும், காக்கநாட்டில் உள்ள முன்னணி ஐ.டி.நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணியாற்றி வருவதும் குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்ட விபின் ராய் மீது பாலியல் துன்புறுத்தல் மற்றும் மிரட்டல் விடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.