மலேசியா செல்ல இனி விசா கட்டாயம்! 2027 முதல் புதிய விதிகள் என்னென்ன?

 
மலேசியா

 

மலேசியாவுக்குச் செல்லும் இந்தியர்களுக்கான விசா விதிமுறைகளில் முக்கிய மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை வழங்கப்பட்டு வந்த விசா இல்லா நுழைவு அனுமதி, 2027 ஜனவரி 1 முதல் நிறுத்தப்பட உள்ளது. இதனால், மலேசியா செல்லும் இந்தியர்கள் பயணத்திற்கு முன்பாகவே செல்லுபடியாகும் விசா பெறுவது கட்டாயமாகிறது.

Malaysia Visa for Indians 2027: Visa-Free Entry Ends

இதுகுறித்து மலேசிய குடியேற்றத்துறை (JIM) நவம்பர் 17-ம் தேதி வெளியிட்ட அறிவிப்பில், இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கான விசா விலக்கு வசதி ஜனவரி 1 முதல் நடைமுறையில் இருக்காது எனத் தெரிவித்துள்ளது. டிசம்பர் 1, 2026 முதல் MyVISA இணையதளம் மூலம் விசாவுக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்களுக்கு புதிய கட்டுப்பாடு

'New Application' அல்லது 'Pending Payment' என்ற நிலையில் 7 வேலை நாட்களுக்கு மேல் நிலுவையில் இருக்கும் விண்ணப்பங்கள் தானாகவே காலாவதியாகிவிடும். இந்த விதி 2026 அக்டோபர் 1 முதல் அமலுக்கு வந்துள்ளது. காலாவதியானவர்கள் புதிய விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.

Malaysia visa-free entry for Indians to end on 1 January 2027 Malaysia visa-free entry for Indians will end on 1 January 2027, according to the country's Immigration Department. Indian passport

விசா கட்டணம் திரும்ப கிடைக்காது

விசா விண்ணப்பம் ஏற்கப்பட்டாலும், நிராகரிக்கப்பட்டாலும் செலுத்திய கட்டணம் திரும்ப வழங்கப்படாது. பயணத் திட்டம் அல்லது விசா விதிமுறைகள் மாறினாலும் கட்டணத்தைத் திரும்பப் பெற முடியாது என குடியேற்றத்துறை தெரிவித்துள்ளது.

மருத்துவக் காப்பீடும் அவசியம்

மலேசியாவில் தங்கும் காலம் முழுவதற்கும் பொருந்தக்கூடிய பயண மருத்துவக் காப்பீடு வைத்திருக்க வேண்டும் என்றும் அந்நாட்டு குடியேற்றத்துறை அறிவுறுத்தியுள்ளது. வெளிநாட்டுப் பயணிகள் அங்கு பெறும் மருத்துவச் சிகிச்சைக்கான செலவுகளைத் தாங்களே ஏற்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவக் காப்பீடு மற்றும் அவசர உதவிகளுக்காக 'MyTripPass' தளத்தையும் பரிந்துரைத்துள்ளது.

எனவே, 2027-ல் மலேசியா செல்லத் திட்டமிடும் இந்தியர்கள் புதிய விசா நடைமுறைகள் மற்றும் மருத்துவக் காப்பீட்டு விதிமுறைகளைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.