மனைவி இறந்த சோகம் தாங்காமல் மலேசிய முன்னாள் பிரதமருக்கு திடீர் உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் அனுமதி!

 
மலேசிய முன்னாள் பிரதமர் மகாதிர் முகமது

மலேசியாவின் முன்னாள் பிரதமரும், நவீன மலேசியாவின் சிற்பியுமாக அறியப்படும் மகாதிர் முகமது, தனது மனைவியின் மறைவைத் தாங்க முடியாத மனவேதனை காரணமாகத் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

101 வயதான மகாதிர் முகமது கடந்த ஆகஸ்ட் மாதம் தனது மனைவி சித்தி ஹாஸ்மாவுடன் (100) 70-வது திருமண தினத்தைக் கொண்டாடிய நிலையில், கடந்த திங்கட்கிழமை சித்தி ஹாஸ்மா காலமானார். மனைவியின் இறுதிச்சடங்கின் போது மகாதிர் முகமது கண்ணீர்விட்டு அழுத நிகழ்வு மலேசிய மக்களைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.

மனைவியைப் பிரிந்த துயரமும் கடுமையான மனவேதனையும் காரணமாக அவருக்கு நேற்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. கோலாலம்பூரில் உள்ள தேசிய இதய சிகிச்சை மையத்தில் அவசர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு, ஏற்கெனவே இதய அறுவை சிகிச்சை செய்துள்ளதைக் கருத்தில் கொண்டு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.