மனம் திறந்த மல்லிகார்ஜுன கார்கே... பிரதமர் பதவி வேண்டும் என்று காங்கிரஸ் விரும்பவில்லை !!

 
வணிகம்


காங்கிரஸ் தலைமையிலான அனைத்துக்கூட்டணிக்கட்சி கூட்டம் நேற்று பெங்களூருவில் நடைபெற்றது அதில் உரையாற்றிய மல்லிகாஜுன கார்கே நாட்டின் நலனே எங்களுக்கு முக்கியம்," எனத்தெரிவித்தார். நாடாளுமன்ற தேர்தல் அடுத்தாண்டு ஏப்ரல் - மே மாதங்களில் நடக்க உள்ளது. மத்தியில் ஆளும், பா.ஜ.கவுக்கு எதிராக, வலுவான எதிர்க்கட்சிகள் கூட்டணியை உருவாக்கும் முயற்சி நடந்து வருகிறது. இதன்படி, எதிர்க்கட்சிகளின் முதல் ஆலோசனைக் கூட்டம், பீஹாரின் பாட்னாவில் கடந்த மாதம் 23ம் தேதி நடந்தது. இதில், 15 கட்சிகள் பங்கேற்றன. இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் இரண்டாவது கூட்டம், கர்நாடக மாநிலம் பெங்களூரில் நேற்று முன்தினம் துவங்கியது. இதில், காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா, ராகுல், தமிழக முதல்வரும், தி.மு.க, தலைவருமான ஸ்டாலின் உள்ளிட்ட 26 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

வணீகம்
இரண்டாவது நாளாக நேற்று கட்சிகளின் தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே துவக்க உரையாற்றினார்.அப்போது அவர் பேசிய பொழுது... கடந்த லோக்சபா தேர்தலில் பா.ஜ.க தனித்து 303 இடங்களில் வெல்லவில்லை; கூட்டணி கட்சிகளின் ஆதரவுடனேயே ஆட்சியைப் பிடித்தது. அதன்பின், அந்த கூட்டணி கட்சிகளை ஒதுக்கியது. தற்போது ஒவ்வொரு மாநிலமாகச் சென்று கூட்டணியில் சேரும்படி, பிரிந்து சென்ற கட்சிகளிடம் பா.ஜ.க, தலைவர்கள் கெஞ்சி வருகின்றனர்.
மத்தியில் ஆளும் பா.ஜ,க அரசு, சி.பி.ஐ., அமலாக்கத்துறை, வருமான வரித்துறை போன்ற அரசு அமைப்புகளை ஆயுதமாக பயன்படுத்தி வருகிறது.எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மீது பொய் வழக்குகளை பதிவு செய்து, இந்த அமைப்புகள் வாயிலாகமிரட்டி வருகிறது. எம்.பி.- எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்கின்றனர். மிரட்டி அல்லது பேரம் பேசி, பா.ஜ.கவில் சேர்த்துக் கொள்கின்றனர். நாம், நம்மிடையே உள்ள வேற்றுமைகள் மற்றும் கருத்து வேறுபாடுகளை ஒதுக்கிவைத்து.

வணிகம்

பா.ஜ.கவை ஒன்றாக எதிர்ப்போம். இந்தக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள 26 கட்சிகள், 11. மாநிலங்களில் ஆட்சியில் உள்ளன.ஆட்சி அதிகாரத்தை பிடிக்க வேண்டும் பிரதமர் பதவியை பெற வேண்டும் என்பது காங்கிரசின் நோக்கம் அல்ல. எங்களுடைய நோக்கம், நம் ஜனநாயகம், அரசியல் சாசனம், மத சார்பின்மை, சமூக நீதி பாதுகாக்கப்பட வேண்டும் ஜனநாயகத்தை அழிக்க பா.ஜ.க முயற்சிக்கிறது. நம்மிடையே சில கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், அது கொள்கை ரீதியிலானது அல்ல விலைவாசியால் பாதிக்கப்பட்டுள்ள சாதாரண மக்கள், நடுத்தர மக்களின் நலனுக்காக இவற்றை ஒதுக்கி வைப்போம் வேலைவாய்ப்பின்மையில் திண்டாடும் இளைஞர்களுக்காக, ஏழை மக்களுக்காக, தலித், பழங்குடியினர், சிறுபான்மையினர் உரிமை பெறுவதற்காக நாம் ஒன்றாகச் செயல்படுவோம். இவ்வாறு அவர் பேசினார்.கூட்டத்திற்குபின் நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கலந்து கொள்ளாத தமிழக முதல்வர் ஸ்டாலின் இம்முறை நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பிலும் கலந்து கொள்ளவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web