காதலியின் நிர்வாணப் புகைப்படத்தையும், செல்போன் எண்ணையும் ஆபாச வலைத்தளங்களில் பரப்பிய காதலன் - பணம் கேட்டு மிரட்டிய கொடூரம்!

 
காதலன் நிர்வாணம் விபச்சாரம் கொலை ஆபாசம் வீடியோ செல்போன்

கேரள மாநிலம் பாலக்காடு பகுதியில், காதலிப்பதாக நடித்துக் கொண்டு, இளம்பெண் ஒருவரின் அந்தரங்கப் புகைப்படங்கள், வீடியோ மற்றும் செல்போன் எண்ணை சமூக வலைதளங்களில் அவதூறாகப் பரப்பிய இளைஞரை  காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். பணம் கேட்டுத் தொல்லை கொடுத்து வந்த நிலையில், ஒரு கட்டத்தில் பணம் கொடுக்க இளம்பெண் மறுத்த நிலையில், அவரைப் பழிவாங்கும் நோக்கில் இளம்பெண்ணின் நிர்வாண புகைப்படத்தைப் பரப்பியுள்ளார். 

கேரளாவிலுள்ள பாலக்காடு பகுதியைச் சேர்ந்த உமர் ஃபாரூக் என்ற இளைஞரும், இளம்பெண் ஒருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். ஆரம்பத்தில் நண்பர்களாகப் பழகிய இவர்கள், பின்னர் ஒரே வீட்டில் குடும்பம் நடத்துவது போல கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து  லிவிங் டூ கெதர் வாழ்க்கையாக இணைந்து வசித்து வந்துள்ளனர்.

ஆபாச வீடியோ செல்போன்

இருவரும் நெருக்கமாக வாழ்ந்து வந்த காலத்தில், அந்தப் பெண்ணின் தனிப்பட்ட தருணங்கள், அந்தரங்கப் புகைப்படங்கள், வீடியோக்கள் சிலவற்றை உமர் ஃபாரூக் தனது செல்போனில் இளம்பெண்ணுக்குத் தெரியாமல் பதிவு செய்து வைத்துள்ளார். இந்நிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகளும் பணப் பிரச்சினைகளும் தலைதூக்கத் தொடங்கியுள்ளன.

காதலித்து வந்த பெண்ணிடம் உமர் ஃபாரூக் திடீரெனப் பெரிய அளவில் பணம் கேட்டு வற்புறுத்தியுள்ளார். ஆனால், அந்தப் பெண் அதற்குத் தொடர்ந்து மறுப்புத் தெரிவித்துள்ளார். தனது மிரட்டலுக்கு காதலி செவிசாய்க்காததால் ஆத்திரமடைந்த உமர், எப்படியாவது அந்தப் பெண்ணைப் பழிவாங்க வேண்டும் என்று திட்டமிட்டுள்ளார்.

இதன் ஒரு பகுதியாக, தன்னிடம் இருந்த அந்தப் பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைச் சமூக வலைதளங்களின் பல்வேறு குழுக்களிலும், பொதுவெளிகளிலும் பதிவேற்றம் செய்துள்ளார். அதுமட்டுமின்றி, அந்தப் பெண்ணின் செல்போன் எண்ணையும் பல்வேறு இணையதளங்களிலும் டேட்டிங், விலைமாதர் குறித்த விளம்பரப் பக்கங்களிலும் பகிர்ந்துள்ளார்.

லேடீஸ் ஹாஸ்டல் ரகசிய கேமிரா செல்போன் குளியலறை வீடியோ பாத்ரூம்

இந்த செயலால் அந்தப் பெண்ணின் செல்போனுக்கு தினமும் புதிய எண்களிலிருந்து நூற்றுக்கணக்கான அழைப்புகள் வரத் தொடங்கியுள்ளன. இதனால் மனதளவில் கடுமையாகப் பாதிக்கப்பட்டஅந்தப் பெண், உடனடியாக இதுகுறித்து பாலக்காடு மாவட்டக் காவல் நிலையத்தில் நேரில் சென்று புகாரளித்தார்.

புகாரின் தீவிரத்தை உணர்ந்த காவல்துறையினர், உடனடியாகச் சைபர் கிரைம் மற்றும் உள்ளூர் போலீசார் உதவியுடன் தீவிர விசாரணையைத் தொடங்கினர். தொழில்நுட்பத் தடயங்கள் மற்றும் சமூக வலைதளப் பதிவுகளின் மூலமாகப் புகாருக்குக் காரணமான நபரைக் கண்டறிந்த காவல்துறையினர், உமர் ஃபாரூக்கை கைது செய்தனர். பெண்களின் அந்தரங்கப் பாதுகாப்பைச் சீர்குலைக்கும் வகையிலும், பணத்திற்காக மிரட்டி அவதூறு பரப்பும் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பாலக்காடு காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.