சொகுசு ஹோட்டல் அறையில் ஆணும் பெண்ணும் சடலமாகக் கண்டெடுப்பு - போலீசார் தீவிர விசாரணை!

 
சடலமாக தம்பதி காதலர்கள்

உத்தரப்பிரதேச மாநிலம் பஹ்ரைச்சில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் ரிங்கு (27), பிங்கி (42) ஆகிய இருவரும் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.

கடந்த செப்டம்பர் 22-ஆம் தேதி முதல் பஹ்ரைச்சில் உள்ள அந்த ஹோட்டலில் ரிங்கு மற்றும் பிங்கி இருவரும் தங்கியிருந்துள்ளனர். கடந்த வியாழக்கிழமை வரை அவர்கள் அறையிலேயே இருந்துள்ளனர்.

மாணவி இளம்பெண் சடலமாக சடலம் தற்கொலை கொலை

நேற்று முன் தினம் நீண்ட நேரமாகியும் அறை பூட்டப்பட்டே கிடந்ததால் சந்தேகம் அடைந்த ஹோட்டல் ஊழியர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது இருவரும் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இது தற்கொலைச் சம்பவமாக இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. எனினும், உயிரிழந்த இருவருக்கும் இடையிலான உறவுமுறை மற்றும் தற்கொலைக்கான உண்மையான காரணம் என்ன என்பது குறித்துக் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.