போக்குவரத்து காவலரைத் தாக்கி அவதூறாகப் பேசிய நபர் கைது!
ஹைதராபாத் நம்பள்ளி பகுதியில் போக்குவரத்து விதிமீறலைத் தட்டிக் கேட்ட ஊர்க்காவலரைத் தாக்கியதுடன், அவதூறாகப் பேசிய நபரைக் காவல்துறையினர்
ஹைதராபாத் தாஜ் ஐலேண்ட் சந்திப்பில் போக்குவரத்து ஊர்க்காவலரான கே. ரவீந்தர் என்பவர் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அப்பகுதியைக் கடந்த முகமது ரிஸ்வான் மற்றும் அவரது மனைவி இருவரும் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். இதனைக் கவனித்த ஊர்க்காவலர் ரவீந்தர், தனது செல்போன் கேமரா மூலம் அந்த விதிமீறலைப் புகைப்படம் எடுத்துள்ளார்.
புகைப்படம் எடுக்கப்பட்டதை அறிந்த ரிஸ்வான் வண்டியைத் திருப்பி வந்து ஊர்க்காவலரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். மேலும், அவரது மனைவியும் ஊர்க்காவலரைத் திட்டியதோடு, அந்தச் சம்பவத்தைத் தமது செல்போனில் பதிவு செய்து அரசுப் பணியைச் செய்யவிடாமல் தடுத்துள்ளனர்.
இது குறித்து ஊர்க்காவலர் ரவீந்தர் அளித்த புகாரின் அடிப்படையில், நம்பள்ளி காவல்துறையினர் ரிஸ்வான் மீது பாரதிய நியாய சம்ஹிதா மற்றும் மோட்டார் வாகனச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். முகமது ரிஸ்வானைக் கைது செய்த காவல்துறையினர், அவர் பயணம் செய்த இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்தனர். மேலும் அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
