மது அருந்த பணம் தராததால் ஆத்திரம்... தாயை அடித்துக் கொன்ற மகன்!

 
பாலியல் கொலை உல்லாசம் க்ரைம்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே மது குடிக்கப் பணம் தராத ஆத்திரத்தில் பெற்ற தாயையே அடித்துக் கொன்று, அவரது தங்கக் கம்மலைப் பறித்துச் சென்ற மகனை வந்தவாசி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

வந்தவாசியை அடுத்த கீழ்பாதிரி கிராமத்தைச் சேர்ந்தவர் மங்கலட்சுமி (78). இவரது மகன் ஏழுமலை (47), கூலித்தொழிலாளி. கடந்த ஜூலை 27-ம் தேதி ஏழுமலை தனது தாயாரிடம் மது அருந்துவதற்குப் பணம் கேட்டுள்ளார். அதற்கு மங்கலட்சுமி பணம் தர மறுக்கவே இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த ஏழுமலை, தனது தாயை கொடூரமாகத் தாக்கிவிட்டு, அவர் காதில் அணிந்திருந்த தங்கக் கம்மலையும் வலுக்கட்டாயமாகப் பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

தற்கொலை

படுகாயமடைந்த மங்கலட்சுமியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து மங்கலட்சுமியின் மகள் இருசம்மாள் அளித்த புகாரின் அடிப்படையில், வந்தவாசி வடக்குக் காவல்துறையினர் கொலை வழக்குப் பதிவு செய்தனர். தொடர்ந்து தலைமறைவாக இருந்த ஏழுமலையைக் காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.