கன்னியாகுமரியில் 7 நட்சத்திர ஆமைகளைப் பதுக்கி வைத்திருந்த நபர் கைது!
கன்னியாகுமரி மாவட்டம் லெவிஞ்சிபுரம் பகுதியில் வெளிநாடுகளுக்குக் கடத்துவதற்காகச் சிறிய அளவிலான 7 நட்சத்திர ஆமைகளைப் பதுக்கி வைத்திருந்த நபர் காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் லெவிஞ்சிபுரம் பகுதியில் வெளிநாடுகளுக்குக் கடத்துவதற்காக நட்சத்திர ஆமைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகக் கிடைத்த ரகசியத் தகவலை அடுத்து, காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சிறிய அளவிலான 7 நட்சத்திர ஆமைகளைப் பதுக்கி வைத்திருந்த முகேஷ் என்பவரைப் போலீசார் கைது செய்தனர். கைப்பற்றப்பட்ட 7 நட்சத்திர ஆமைகளும் உடனடியாக வனத்துறை அதிகாரிகளிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இந்த நட்சத்திர ஆமைகள் வெளிநாடுகளுக்குக் கடத்தப்பட இருந்தனவா அல்லது வேறு ஏதேனும் நோக்கத்திற்காகப் பதுக்கப்பட்டதா என்பது குறித்துக் காவல்துறையினரும் வனத்துறையினரும் இணைந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
