சித்தியைக் கொன்றுவிட்டு, மனைவியை ஜனநாயகன் படத்திற்கு அழைத்து சென்ற வாலிபர் கைது!
புதுச்சேரி கருவடிக்குப்பம் பகுதியில் நகையைக் கொள்ளையடிப்பதற்காகச் சித்தியைக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டு, ஒன்றும் தெரியாதது போலக் திரையரங்கிற்குச் சென்று படம் பார்த்த அக்கா மகனையும், அவரது மனைவியையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
புதுச்சேரி கருவடிக்குப்பத்தைச் சேர்ந்த ரமணி என்பவருக்கு, அவரது அக்கா மகனான பிரவீன் சர்ப்ரைஸ் தருவதாகக் கூறிவிட்டு, அவரது கண்களைத் துணியால் கட்டியுள்ளார். அதன் பின்னர் கண்கள் கட்டப்பட்டிருந்த ரமணியைக் கம்பியால் கொடூரமாகக் குத்திக் கொலை செய்து விட்டு, அவரிடமிருந்த தங்க நகைகளைக் கொள்ளையடித்துள்ளார். சித்தியைக் கொலை செய்து விட்டு, அவர் அணிந்திருந்த நகைகளைக் கொள்ளையடித்த பிரவீன், தன் மனைவி ஈஸ்வரியுடன் சேர்ந்து ஒன்றும் தெரியாதது போல் கடலூருக்குச் சென்று திரையரங்கில் 'ஜனநாயகன்' திரைப்படத்தைப் பார்த்துள்ளார்.

இக்கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், தீவிரத் தேடுதலுக்குப் பின் பிரவீன் மற்றும் அவரது மனைவி ஈஸ்வரி ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.10 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
நகைக்காகச் சொந்தச் சித்தியையே கொடூரமாகக் கொலை செய்துவிட்டு, தம்பதி இருவரும் சினிமாவுக்குச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
