பெண்கள் உதவியுடன் ஆயுத விற்பனை செய்த நபர் கைது - மணிப்பூரில் அதிர்ச்சி!

 
மணிப்பூர் ஆயுதம் விற்பனை கைது

மணிப்பூர் மாநிலம், கிழக்கு இம்பால் மாவட்டம் தம்பல்னு சந்தைப் பகுதியில் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட தீவிர சோதனையின்போது, பெண்கள் சிலரின் உதவியுடன் சட்டவிரோதமாக ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை விற்பனை செய்துவந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிழக்கு இம்பால் மாவட்டம் தம்பல்னு சந்தைப் பகுதியில் பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பு மற்றும் ரோந்துப் பணிகளைத் தீவிரப்படுத்தியிருந்தனர். அப்போது அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் செயல்பட்ட நபர் ஒருவரைப் பிடித்து விசாரணை நடத்தினர்.

பள்ளி மாணவி தற்கொலை!! கல்லூரி மாணவர் கைது.!!

விசாரணையில், கடந்த ஜூலை மாதம் இரு பெண்கள் மூலமாக ரூ.10,000 பணத்தைப் பெற்றுக்கொண்டு ஒருவருக்குக் கையெறி குண்டு விற்பனை செய்தது உறுதியானது.

இதனையடுத்து அந்த இளைஞரைக் கைது செய்த பாதுகாப்புப் படையினர், அவரை மேலதிக விசாரணைக்காகக் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும், அவரிடமிருந்து பெருமளவிலான வெடிபொருட்களும் ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. மணிப்பூரில் பாதுகாப்புப் படையினரின் இந்தத் தொடர் சோதனைகள் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தப் பெரிதும் உதவியாகவுள்ளன.