சிக்கன் துண்டுக்காக நண்பனைக் கத்தியால் குத்திக்கொன்ற நபர் கைது!

 
சிக்கன்

கர்நாடக மாநிலத்தில் அதிக சிக்கன் துண்டுகளைச் சாப்பிட்டது தொடர்பாக நண்பர்களிடையே ஏற்பட்ட தகராறில், ஒருவரைக் கத்தியால் குத்திக்கொலை செய்துவிட்டு நாடகமாடிய சக நண்பரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மது அருந்தியபோது நண்பர்களான சீதாராமன் மற்றும் அருண் ஆகியோருக்கு இடையே உணவில் அதிக சிக்கன் துண்டுகளைச் சாப்பிட்டது தொடர்பாகக் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்தச் சண்டையின் உச்சத்தில் ஆத்திரமடைந்த அருண், சீதாராமனைக் கத்தியால் குத்திக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.

சிக்கன் பக்கோடா

கொலை செய்ததை மறைப்பதற்காக, சீதாராமன் கட்டிடத்தின் மேலிருந்து தவறி கீழே விழுந்துவிட்டதாகக் கூறி அருண் நாடகமாடியுள்ளார். எனினும், காவல்துறையினர் மேற்கொண்ட தீவிர மற்றும் முறையான விசாரணையில் அருணின் சதி அம்பலமானது. இதனையடுத்து, கொலையில் தொடர்புடைய அருணை காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.