பெங்களூருவில் பெண்களின் உள்ளாடைகளைத் திருடி ஆபாச செயலில் ஈடுபட்ட வாலிபர் கைது!

 
உள்ளாடை உள்ளாடைகள் திருடி கொடிக்கயிறு துணி

பெங்களூருவில் வீடுகளின் வாசலில் காயவைக்கப்பட்டிருக்கும் பெண்களின் உள்ளாடைகளைத் தொடர்ச்சியாகத் திருடி வந்த 23 வயது வாலிபரைத் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

பெங்களூருவில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதியில், வீடுகளுக்கு வெளியே கயிறுகளில் காயவைக்கப்படும் பெண்களின் புதிய உள்ளாடைகள் அடிக்கடி காணாமல் போவது வழக்கமாக இருந்துள்ளது. மேலும், அவ்வாறு காணாமல் போகும் உள்ளாடைகள் சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் அதே இடத்தில் கொண்டு வந்து வைக்கப்பட்டுள்ளன. இதனால் அதிர்ச்சியும் சந்தேகமும் அடைந்த அப்பகுதிப் பெண்கள், திருடனைக் கண்டுபிடிப்பதற்காகத் தங்களது வீட்டின் முன்புறம் ரகசியக் கேமராக்களை பொருத்தி கண்காணித்தனர். 

அப்போது, அந்தப் பகுதியைச் சேர்ந்த சதாம் (23) என்ற வாலிபர், நள்ளிரவு மற்றும் ஆள் நடமாட்டமில்லாத நேரங்களில் பெண்களின் உள்ளாடைகளைத் திருடிச் செல்வது கேமராவில் துல்லியமாகப் பதிவாகியது. மீட்கப்பட்ட கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, சதாம் உள்ளாடைகளைத் திருடிச் செல்வது மட்டுமன்றி, அவற்றை அவரே அணிந்து கொண்டு ஆபாசமான செயல்களில் ஈடுபட்டு வந்த திடுக்கிடும் தகவலும் வெளிச்சத்திற்கு வந்தது.

இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண்கள் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், கேமரா ஆதாரங்களின் அடிப்படையில் சதாமை அதிரடியாகக் கைது செய்தனர். அவரிடம் இந்த விசித்திரமான மற்றும் வக்கிரமான திருட்டுப் பழக்கம் குறித்துப் போலீசார் தற்பொழுது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.