நண்பர் வீட்டில் கூல்டிரிங்க்ஸ் குடித்தவர் சிறிது நேரத்தில் மர்ம மரணம்!

 
செம்பியம்

சென்னையில் நண்பர் வீட்டில் குளிர்பானம் அருந்திய வேன் ஓட்டுநர் திடீரென மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது கொலையா அல்லது விபத்தா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

குளிர்பானம் ஜூஸ் பழச்சாறு

சென்னை வியாசர்பாடி ராஜீவ்காந்தி நகரைச் சேர்ந்த 25 வயது இளைஞர் கிளிண்டன், தனது நண்பர் வீட்டில் குளிர்பானம் குடித்த சில நிமிடங்களிலேயே உயிரிழந்தது பலத்த சந்தேகங்களை எழுப்பியுள்ளது. வேன் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த கிளிண்டன், பெரம்பூர் ரமணா நகரில் உள்ள தனது நண்பர் பிரசாந்த் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு நண்பர் கொடுத்த குளிர்பானத்தை அருந்திய சிறிது நேரத்திலேயே கிளிண்டன் மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த கிளிண்டன் மதுப் பழக்கத்திற்கு அடிமையானவர் என்றும், இதற்காகப் போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்தவர் என்றும் கூறப்படுகிறது.

பள்ளி மானவி தற்கொலை

இது குறித்து தகவலறிந்து, செம்பியம் போலீசார் கிளிண்டனின் உடலைக் கைப்பற்றி ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். கிளிண்டனின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், இது திட்டமிட்ட கொலையாக இருக்கலாம் என்றும் அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். அவர் குடித்த குளிர்பானம் காலாவதியானதா? அல்லது அதில் ஏதேனும் விஷம் கலக்கப்பட்டதா? என்பது குறித்துப் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளியான பிறகே, இது இயற்கையான மரணமா அல்லது விஷம் கொடுக்கப்பட்டதா என்பது குறித்த உண்மைத் தகவல்கள் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.