நீதிமன்ற வளாகத்திலேயே மனைவியை அரிவாளால் வெட்டிய கணவன் - கன்னியாகுமரியில் பரபரப்பு!

 
அரிவாள் வெட்டு கன்னியாகுமரி மனைவி

கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் நீதிமன்ற வளாகத்தில், விவாகரத்து வழக்கு விசாரணைக்காக வந்த பிரிந்து வாழ்ந்த மனைவியை அரிவாளால் வெட்டிய கணவனைத் தக்கலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

க்ட்

பத்மநாபபுரம் பகுதியைச் சேர்ந்த வின்சென்ட் ராஜ் - ஜெர்லின் பிரேமா தம்பதியிடையே விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தம்பதிக்கு 7 வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராக வந்தபோது, கணவன் வின்சென்ட் ராஜ் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மனைவி ஜெர்லின் பிரேமாவின் தலையில் சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பியோட முயன்றார்.

நீதிமன்ற வளாகத்திலேயே தப்பியோட முயன்ற கணவனை அங்கிருந்த வழக்கறிஞர்கள் சாதுரியமாக மடக்கிப் பிடித்துத் தக்கலை காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

போலீசார் காவல் ஜீப் விசாரணை கொலை கைது பாலியல் பலாத்காரம் நீட்டிப்பு தப்பியோட்டம் கைதி

பலத்த படுகாயமடைந்த மனைவி ஜெர்லின் பிரேமா உடனடியாக மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாதுகாப்பு நிறைந்த நீதிமன்ற வளாகத்திலேயே பெண் ஒருவர் மீது கணவன் நடத்திய இந்த வெறிச்செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.