பணத்திற்காகக் கள்ளக்காதலனைக் கொன்று ட்ரம்மில் அடைத்த காதலி!

 
கள்ளக்காதல் கள்ளக்காதல்

மும்பையின் மும்ப்ரா பகுதியில் காணாமல் போன வாலிபர் ஒருவர், பணத்திற்காகக் காதலியாலேயே அடித்துக் கொலை செய்யப்பட்டு, உடல் ட்ரம்மில் அடைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை மும்ப்ரா பகுதியைச் சேர்ந்த அர்பாஸ் என்ற வாலிபர் கடந்த சில நாட்களாகக் காணாமல் போயிருந்தார். இது குறித்த புகாரின் பேரில் போலீஸார் நடத்திய விசாரணையில், அவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. அர்பாஸின் காதலி மெஹ்ஜபீன் ஷேக், தனது கணவன் மற்றும் சகோதரனுடன் இணைந்து இக்கொலையைச் செய்துள்ளார். 

கள்ளக்காதல்

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், அர்பாஸை வெர்சோவா பகுதிக்கு வரவழைத்த மெஹ்ஜபீன், அங்குத் தனது கணவர் ஹசன் மற்றும் சகோதரர் தாரிக் ஆகியோருடன் சேர்ந்து அர்பாஸை அடித்துக் கொலை செய்துள்ளார். கொலையை மறைக்க, அர்பாஸின் உடலை ஒரு பெரிய பிளாஸ்டிக் ட்ரம்மில் அடைத்து, ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் உள்ள சாக்கடையில் வீசியுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக மெஹ்ஜபீன் ஷேக் மற்றும் அவரது சகோதரர் தாரிக் ஆகியோரைப் போலீஸார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள மெஹ்ஜபீனின் கணவர் ஹசன் மற்றும் இக்கொலையில் தொடர்புடைய மற்றொரு நபரையும் போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

கள்ளக்காதல்

பணப் பேராசையினால் காதலியே தனது கணவனுடன் சேர்ந்து காதலனைக் கொன்ற இந்தச் சம்பவம் மும்பையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கைதானவர்களிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.