காதலிக்கு ஆபாச செசேஜ் அனுப்பிய பள்ளித் தோழரைக் கொலை செய்த காதலன்!
சென்னை மாங்காடு பகுதியில் காதலியின் செல்போனுக்குத் தொடர்ந்து ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பியதாகக் கூறி, பள்ளித் தோழரைக் காதலனே அடித்துக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாங்காடு அருகே உள்ள பகுதியைச் சேர்ந்த வாலிபர் விக்கி என்பவர், தனது காதலியின் செல்போனுக்குத் தொடர்ந்து ஆபாசமான குறுஞ்செய்திகள் வந்ததால் கடும் ஆத்திரமடைந்துள்ளார். அந்தச் செய்திகளை அனுப்பியது விக்கியின் பள்ளித் தோழரான யுவனேஷ் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து யுவனேஷை நேரில் சந்தித்து விக்கி தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட வாய்த்தகராறு முற்றிய நிலையில், விக்கி அவரைச் சரமாரியாகத் தாக்கியுள்ளார்.
இத்தாக்குதலில் படுகாயமடைந்து தீவிர சிகிச்சையில் இருந்த யுவனேஷ், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். நண்பரே நண்பரைக் கொலை செய்த இச்சம்பவம் குறித்து மாங்காடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
