மனைவி, மகளைக் குளத்தில் வீசிக் கொன்ற கொடூரன்.. 8 வயது சிறுவனின் சாதுர்யத்தால் வெளிச்சத்துக்கு வந்த உண்மை!

 
குளத்தில் வீசிக் கொலை

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில், குடும்பத் தகராறில் மனைவி மற்றும் மகளைக் கொடூரமாகக் கொலை செய்து குளத்தில் வீசிய கணவனைப் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். உயிருக்குப் போராடிய 8 வயது சிறுவனின் சாதுர்யத்தால் இந்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

தந்தை சுனில் சௌஹான், தன் தாயையும் சகோதரியையும் தாக்கிப் பாழடைந்த குளத்தில் வீசியதுடன், இந்த 8 வயது சிறுவனையும் நீரில் வீசியுள்ளார். ஆனால், அந்தச் சிறுவன் குளத்தின் அருகிலிருந்த புதர்களைப் பிடித்துக் கொண்டு, நீரில் மூழ்கி இறந்து விட்டதாக நடித்துத் தப்பியுள்ளான். தந்தை அங்கிருந்து சென்ற பிறகு, அங்கிருந்து தப்பித்து அருகில் உள்ள கிராமத்திற்குச் சென்று பொதுமக்களுக்குத் தகவல் தெரிவித்துள்ளான். தொடர்ந்து ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரை நிறுத்திச் நடந்த கொடூரத்தைக் கூறியுள்ளான்.

மாணவி இளம்பெண் சடலமாக சடலம் தற்கொலை கொலை

சிறுவனின் வாக்குமூலத்தைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் இரவு முழுவதும் தேடுதல் வேட்டை நடத்தி, குளத்திலிருந்து இரண்டு உடல்களை மீட்டனர். உயிரிழந்தவர்கள் சுனில் சௌஹானின் மனைவி அனிதா (32) மற்றும் மகள் மஹி (11) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஓட்டுநரான சுனில் சௌஹானுக்கும் அனிதாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அனிதா செல்போனில் பலருடன் பேசுவதாகச் சுனில் சந்தேகித்ததே இந்த மோதலுக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவத்தன்று குடும்பத்தினரைக் குளத்திற்கு அழைத்துச் சென்ற சுனில், மனைவியின் சேலையால் கழுத்தை நெரித்துக் கத்தியால் குத்தியுள்ளார். பின்னர் மனைவியையும் இரு குழந்தைகளையும் குளத்தின் ஆழமான பகுதியில் வீசிவிட்டுத் தப்பியோடியுள்ளார். இச்சம்பவத்திற்குப் பிறகு சௌஹான் தற்கொலைக்கு முயன்ற நிலையில், அதற்குள் விரைந்து செயல்பட்ட காவல்துறையினர் அவரைப் மடக்கிப் பிடித்து அதிரடியாகக் கைது செய்தனர்.