மனைவியைக் கொன்று எரித்து எலும்புகளை ஆற்றில் வீசிய கணவன்.. ஆக்ராவில் அதிர்ச்சி!

 
மனைவியை மனைவி கொலை

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா அருகே குடும்பத் தகராறில் மனைவியைக் கொலை செய்து, உடலை எரித்து எஞ்சிய எலும்புகளை யமுனை ஆற்றில் வீசிய கணவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மனைவி மாயமாகிவிட்டதாக நாடகமாடிய கணவனின் கொடூரச் செயல் போலீசாரின் தீவிர விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

ஆக்ரா அருகே உள்ள அச்னேரா காவல் எல்லைக்குட்பட்ட குக்தாலா கிராமத்தைச் சேர்ந்தவர் லோகேந்திரா (32). இவருடைய மனைவி சாந்தினி (30). தம்பதியிடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. திருமணமான நாளிலிருந்தே லோகேந்திரா தனது மனைதியைத் தொடர்ந்து சித்திரவதை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.

கள்ளக்காதல்

சமீபத்தில் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த லோகேந்திரா, சாந்தினியின் தலையில் பலத்த பொருளால் தாக்கியுள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கொலையை மூடிமறைப்பதற்காக வீட்டின் பின்புறம் உள்ள கொட்டகைக்கு உடலைக் கொண்டு சென்று பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார். பின்னர் எஞ்சிய உடல் பாகங்களையும், மனைவியின் செல்போனையும் அருகில் உள்ள யமுனை ஆற்றில் வீசியுள்ளார்.

மனைவி திடீரென மாயமாகிவிட்டதாகக் கூறி, அவரது குடும்பத்தினருக்கே தெரியாமல் அவர்களை வைத்துக்கொண்டு சாந்தினியைத் தேடுவது போல் லோகேந்திரா நாடகமாடியுள்ளார்.

போலீசார் காவல் ஜீப் விசாரணை கொலை கைது பாலியல் பலாத்காரம் நீட்டிப்பு தப்பியோட்டம் கைதி

சாந்தினியின் 2 வயது பச்சிளம் பெண் குழந்தை பக்கத்து வீட்டில் தனியாகக் கண்டெடுக்கப்பட்டதே காவல்துறையினருக்கு அவர் மீது சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து லோகேந்திராவைக் காவல் நிலையம் அழைத்து வந்து காவல்துறையினர் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

தீவிர விசாரணையில் லோகேந்திரா தான் செய்த கொடூரக் குற்றத்தை ஒப்புக்கொண்டார். அவர் அளித்த தகவலின் பேரில், யமுனை ஆற்றங்கரையில் வீசப்பட்ட சாந்தினியின் எஞ்சிய எலும்புத் துண்டுகள் மற்றும் அவரது செல்போன் காவல்துறையினரால் மீட்கப்பட்டன. சம்பவ இடத்திற்குத் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு முக்கிய தடயங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. இக்கொலை வழக்கில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் அச்னேரா உதவி ஆணையர் ஷைலேந்திர சிங் தலைமையிலான காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.