மதிய உணவு கொண்டு வர தாமதமானதால் மனைவியைக் கொலை செய்த கணவன்... பெரும் பரபரப்பு!

 
திருச்சி

திருச்சியைச் சேர்ந்தவர் சம்பத்குமார். இவரது மனைவி கவிதா. நேற்று மதிய உணவு கொண்டு வர கவிதா தாமதம் செய்ததால், கணவன் மற்றும் மனைவி இடையே கடுமையான வாக்குவாதம்  ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சம்பத்குமார், வீட்டில் இருந்த தேங்காய் உரிக்கும் கம்பியால் தனது மனைவியை ஓங்கித் தாக்கியதாகத்  குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஆம்புலன்ஸ்

இந்தத் தாக்குதலில் தலையில் பலத்த காயமடைந்த மனைவி கவிதா, திருச்சி சீனிவாசா நகரில் உள்ள ஆர்.ஜே. தனியார் மருத்துவமனையில் அவசரச் சிகிச்சைக்காக   அனுமதிக்கப்பட்டார். அங்குச் சிகிச்சையில் இருந்த கவிதாவைத் தேடி மருத்துவமனைக்கே வந்த சம்பத்குமார், தான் மறைத்து வைத்திருந்த ஸ்குரூ டிரைவரால் அவரைச் சரமாரியாகக் குத்திக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். கணவனின் இந்தச் செயலால் பலத்த காயமடைந்த கவிதா, மருத்துவமனையிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

ச்

இந்தத் திடீர் கொலைச் சம்பவம் குறித்துத் தனியார் மருத்துவமனை நிர்வாகம் உடனடியாகக் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தது. இதையடுத்து நிகழ்விடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உயிரிழந்த கவிதாவின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தப்பியோடிய கணவன் சம்பத்குமாரைப் பிடிக்கத் தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.