மனைவியின் கழுத்தை அறுத்து கொன்றுவிட்டு காவல் நிலையத்தில் சரணடைந்த கணவன்!
நேற்று காலை பள்ளிக்கல்லில் வசித்து வந்த சரஸ்வதி அம்மா (50) என்பவரை அவரது கணவர் சுரேந்திரன் கொடூரமாக கழுத்தை அறுத்து படுகொலை செய்துள்ளார்.

இது குறித்து போலீசாரின் விசாரணையில், குற்றம் சாட்டப்பட்டவர் தனது மனைவியின் கழுத்தை அறுப்பதற்கு முன்பு அவரது கைகளை ஒன்றாகக் கட்டினார். அதன் பின்னர் கழுத்தை அறுத்து ச் செய்து விட்டு ஒரு ஆட்டோ ரிக்ஷாவை வாடகைக்கு எடுத்துக் கொண்டு நேராக காவல் நிலையத்திற்கு வந்து சரணடைந்துள்ளார்.
நேற்று வீட்டில் தம்பதியர் தனியாக இருந்துள்ள நிலையில், இந்த கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது. எனினும், கொலைக்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை. கொட்டாரக்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில், அவர்களில் ஒருவர் வெளிநாட்டில் வசித்து வருகிறார். இவர்களது மருமகள் பக்கத்து வீட்டிற்குச் சென்றிருந்த போது இந்த கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
