குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து இளம்பெண்ணை ஆபாச வீடியோ எடுத்த வாலிபர்!

 
ஆபாச வீடியோ

சென்னையில் இளம்பெண்ணுக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்துக் கொடுத்து ஆபாச வீடியோ எடுத்து, மிரட்டி வந்த வாலிபரை ஓட்டேரி காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

பாலியல் பலாத்காரம் சிறுமி

சென்னையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடந்த 2024-ம் ஆண்டு திருவள்ளூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தபோது, அவருடன் பணிபுரிந்த கோகுல்நாத் (26) என்பவருடன் நட்பு ரீதியாகப் பழகியுள்ளார். அலுவலக விருந்தொன்றின் போது, கோகுல்நாத் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து அந்தப் பெண்ணை ஆபாசமாக வீடியோ எடுத்துள்ளார். பின்னர் அந்த வீடியோவைக் காட்டி மிரட்டி, அப்பெண்ணிற்குத் தெரியாமல் மீண்டும் வீடியோ பதிவு செய்துள்ளார். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அப்பெண், அந்த வேலையைவிட்டு விலகித் தனது செல்போன் எண்ணையும் மாற்றியுள்ளார்.

மாணவி பலாத்காரம்!! ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல்!! தமிழக ராணுவ வீரரின் வெறிச்செயல்!!

இருப்பினும், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கோகுல்நாத் மீண்டும் அப்பெண்ணின் புதிய செல்போன் எண்ணைக் கண்டுபிடித்துத் தொடர்பு கொண்டுள்ளார். தன்னுடன் பழக மறுத்தால் ஆபாச வீடியோக்களைக் கணவருக்கும், சமூக வலைதளங்களிலும் பரப்பி விடுவேன் என மிரட்டியுள்ளார். இது குறித்து அப்பெண் அளித்த புகாரின் பேரில், ஓட்டேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து கோகுல்நாத்தைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.