காதலனுடன் வாழ விரும்பிய மனைவிக்கு தானே திருமணம் செய்து வைத்த கணவர்!

 
கள்ளக்காதல்

உத்தரப் பிரதேச மாநிலம் சீதாபூர் பகுதியைச் சேர்ந்த விபின் பார்கவா என்பவரின் மனைவி ரேகா, சமூக வலைதளமான பேஸ்புக் மூலம் அறிமுகமான ராகுல் உபாத்யா என்பவரைக் காதலித்துள்ளார். 17 ஆண்டுகளாக விபினுடன் குடும்பம் நடத்தி வந்த ரேகா, கடந்த 22 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டுச் சென்ற நிலையில், பின்னர் வீடு திரும்பியபோது தனது காதலன் ராகுலுடன் வாழ விரும்புவதாகக் கணவரிடம் தெரிவித்தார்.

தம்பதி காதல் காதலர்கள் புதுமாப்பிள்ளை புதுமணப்பெண்

மனைதியின் இந்த முடிவைக் கேட்டு அதிர்ச்சியடைந்தாலும், அவரது விருப்பத்திற்குத் தடையாக இருக்க விரும்பாத விபின் பார்கவா, சொந்த விருப்பத்தின் பேரில் ஒரு கோயிலில் வைத்து தனது மனைவி ரேகாவுக்கும் ராகுலுக்கும் தாமே முன்னின்று திருமணம் செய்து வைத்துள்ளார். கணவனின் இந்தச் செயல் அப்பகுதியில் பெரும் வியப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.