இளம்பெண்ணைப் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்த நபர்... வீடியோ வெளியிடுவதாக கூறி தொடர்ந்து பலாத்காரம் செய்த கொடூரம்!

 
பலாத்காரம்கைது

இளம்பெண்ணொருவரைப் பலாத்காரம் செய்து, அவரது ஆபாச வீடியோக்களை இணையத்தில் பரப்புவதாக மிரட்டி வந்த ஒடிசாவைச் சேர்ந்த நபரைக் கேரளாவின் கொச்சி காவல்துறையினர் தீவிர தேடுதலுக்குப் பிறகு கைது செய்துள்ளனர்.

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சித்தப் காமிதாங்கா என்பவர், இளம்பெண் ஒருவரைப் பலாத்காரம் செய்ததுடன், அது தொடர்பான ஆபாச வீடியோக்களையும் எடுத்துள்ளார். பின்னர் அந்த வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாகக் கூறி அப்பெண்ணைத் தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார்.

பாலியல் பலாத்காரம் சிறுமி

இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில், கொச்சி காவல்துறையினர் தீவிர விசாரணையைத் தொடங்கினர். இதற்காக ஒரு சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது. தலைமறைவாகியிருந்த குற்றவாளி சித்தப் காமிதாங்கா, ஒடிசாவில் உள்ள மாவோயிஸ்ட் ஆதிக்கம் நிறைந்த சந்திரபுரா கிராமத்தில் பதுங்கியிருப்பது கண்டறியப்பட்டது.

பாலியல் பலாத்காரம் இளம்பெண்

இதனைத் தொடர்ந்து அங்கு சென்ற காவல்துறையினர் அவரை மடக்கிப் பிடிக்க முயன்றபோது, அப்பகுதி கிராம மக்கள் காவல்துறையினரைத் தடுத்துள்ளனர். எனினும், உள்ளூர் அதிகாரிகளின் தலையீடு மற்றும் உதவியுடன் கிராம மக்களின் எதிர்ப்பு மீறப்பட்டு, குற்றவாளி சித்தப் காமிதாங்கா வெற்றிகரமாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.