பர்த் டே பார்ட்டியில் முகத்தில் கேக் பூசியதால் இளைஞர் குத்திக் கொலை!

 
பர்த் டே கேக்

ஜம்முவில் நடைபெற்ற பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது, முகத்தில் கேக் பூசிய விவகாரத்தில் நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஜம்முவின் லோயர் ரூப் நகர் பகுதியில் இச்சம்பவம் நடந்துள்ளது. நீரஜ் என்பவர் தனது சகோதரர் மற்றும் நண்பர்களுடன் இணைந்து தனது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார்.

கேக்

கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, நீரஜின் முகத்தில் அவரது நண்பரான சமீர் கேக் பூசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நீரஜ், திடீரென சமீரை அங்கிருந்த கூர்மையான ஆயுதத்தால் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இத்தாக்குதலில் படுகாயமடைந்த சமீரை அவரது நண்பர்கள் உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.