மனைவியை 170 முறை கத்தரிக்கோலால் குத்திய கணவன் - பீகாரில் கொடூரம்!

 
மனைவியைக் குத்திய கத்திரிக்கோல்

பீகார் மாநிலத்தில் குடும்பத் தகராறு மற்றும் சந்தேகத்தின் காரணமாகத் தனது மனைவியை அழைத்துவந்து, கத்தரிக்கோலால் 170-க்கும் மேற்பட்ட இடங்களில் மிருகத்தனமாகக் குத்திக் கொடூரத் தாக்குதல் நடத்திய கணவனின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பங்கஜ் என்பவருக்குத் தனது மனைவி ராக்கி மீது நீண்ட நாட்களாகச் சந்தேகம் இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக அவர் மனைவியைத் தொடர்ந்து அடித்துத் துன்புறுத்தி வந்துள்ளார். கணவனின் கொடுமை தாங்க முடியாமல் ராக்கி தனது தாய் வீட்டிற்குச் சென்று தஞ்சமடைந்துள்ளார்.

பாலியல் வன்கொடுமை பலாத்காரம் மனைவி தகராறு தம்பதி சண்டை

இந்நிலையில், பங்கஜ் தனது மனைவியின் தாய் வீட்டிற்குச் சென்று, "இனிமேல் உன்னை அடிக்க மாட்டேன்; ஒழுங்காகப் பார்த்துக் கொள்கிறேன்" எனக் கூறிச் சமாதானப்படுத்தி மனைவியை மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.

வீட்டிற்கு வந்த சிறிது நேரத்திலேயே இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பங்கஜ், மிருகத்தனமாகச் செயல்பட்டுக் கத்தரிக்கோலால் மனைவியின் உடலில் 170-க்கும் மேற்பட்ட இடங்களில் கொடூரமாகக் குத்தியுள்ளார்.

போலீசார் காவல் ஜீப் விசாரணை கொலை கைது பாலியல் பலாத்காரம் நீட்டிப்பு தப்பியோட்டம் கைதி

ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிய ராக்கியை அண்டை வீட்டார் மீட்டு உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த மனிதநேயமற்ற கொடூரச் சம்பவம் தொடர்பாகக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக உள்ள கணவன் பங்கஜைப் பிடிக்கத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.