தொழில்வரி செலுத்துவதாக ரூ.5 லட்சம் கையாடல் - நிர்வாக இயக்குநர் கைது!

 
போலீசார் காவல் ஜீப் விசாரணை கொலை கைது பாலியல் பலாத்காரம் நீட்டிப்பு தப்பியோட்டம் கைதி போலீசார் காவல் ஜீப் விசாரணை கொலை கைது பாலியல் பலாத்காரம் நீட்டிப்பு தப்பியோட்டம் கைதி

சென்னை சென்னை அசோக் நகர் பகுதியில் தொழில் வரி செலுத்துவதாகக் கூறி, சுமார் 5 லட்சம் ரூபாய் மோசடி செய்த தனியார் நிறுவன நிர்வாக இயக்குநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை அசோக் நகரைச் சேர்ந்த பாபு (49). இவர் அதே பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். கோவிலம்பாக்கம், ஓம் சக்தி நகரைச் சேர்ந்த பிரபு (43) என்பவர் ஒரு தனியார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகப் பணியாற்றி வருகிறார். பாபு தனது நிறுவனத்தின் வரிகளைச் செலுத்துவதற்காகப் பிரபுவை நியமித்திருந்தார். நம்பகத்தன்மையின் அடிப்படையில், கடந்த 2024 மற்றும் 2025 ஆகிய ஆண்டுகளில் தொழில் வரி செலுத்துவதற்காக மொத்தம் ரூ.5.51 லட்சத்தைப் பிரபுவிடம் பாபு கொடுத்துள்ளார்.

பள்ளி மாணவி தற்கொலை!! கல்லூரி மாணவர் கைது.!!

வரி செலுத்தியதற்கான இரண்டு ரசீதுகளைப் பிரபு, வாட்ஸ்அப் மூலம் பாபுவிற்கு அனுப்பி வைத்துள்ளார். இதற்கிடையே, கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தொழில் வரி செலுத்தப்படவில்லை எனத் தொழில் வரி நிறுவனத்திடமிருந்து பாபுவிற்குத் தகவல் கிடைத்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பாபு விசாரித்தபோது, பிரபு செய்த தில்லுமுல்லு வெளிச்சத்திற்கு வந்தது: பாபு கொடுத்த ரூ.5.51 லட்சத்தில், வெறும் ரூ.51 ஆயிரத்தை மட்டுமே வரியாகச் செலுத்தியுள்ளார். மீதமுள்ள ரூ.5 லட்சத்தைத் தனது சொந்தத் தேவைக்காகப் பயன்படுத்திக் கொண்டு மோசடி செய்துள்ளார். வரி செலுத்தியது போலப் போலியான ரசீதுகளைத் தயாரித்து அனுப்பிப் பாபுவை ஏமாற்றியுள்ளார்.

இது குறித்துப் பாபு அளித்த புகாரின் பேரில், அசோக் நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். மோசடி செய்தது உறுதியானதைத் தொடர்ந்து, பிரபுவைக் கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர். தொழில் ரீதியான பணப் பரிவர்த்தனைகளில் ரசீதுகளின் உண்மைத்தன்மையை ஒருமுறைக்கு இருமுறை சரிபார்க்க வேண்டியதன் அவசியத்தை இச்சம்பவம் உணர்த்துகிறது.