தங்க கவசத்தில் மணக்குள விநாயகர்... ஆயிரக்கணக்கில் குவிந்த பக்தர்கள்!
உலகப்புகழ் பெற்ற புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தங்க கவசத்தில் விநாயகர் இன்று அதிகாலை முதலே பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார். பல மாவட்டங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் வந்திருந்த பக்தர்கள், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அதிகாலை முதலே வரிசையில் நின்று மணக்குள விநாயகரை வழிபட்டு வருகின்றனர்.

புதுவையில் பெரிய மார்க்கெட், நேரு வீதி, மற்றும் பாரதி வீதி உள்ளிட்ட நகர பகுதிகளில் விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு வீடுகளில் வைத்து வணங்க சிறிய விநாயகர் சிலைகள், பழங்கள் விற்பனைக்கு வந்தது.
இவற்றை வாங்க மக்கள் கூட்டம் இன்று காலை முதலே அலைமோதியது. மண் விநாயகர், காகித விநாயகர் என 1 அடி உயரத்தில் இருந்து 12 அடி உயரம் வரையில் விதவிதமான விநாயகர் சிலைகளும், அதோடு விநாயகருக்கு வைத்து வழிபட பழ வகைகள், பூக்கள் மற்றும் பலவிதமான வண்ண குடைகளும் விற்பனை செய்யப்பட்டு வரப்படுகிறது.
ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
