டிப்பர் லாரியை முந்த முயன்றபோது விபரீதம்… பைக்கில் சென்ற 3 இளைஞர்கள் பலி!

 
3

 

தெலுங்கானா மாநிலம் மஞ்சீரியல் மாவட்டத்தில் டிப்பர் லாரியை முந்திச் செல்ல முயன்றபோது ஏற்பட்ட விபத்தில், இருசக்கர வாகனத்தில் பயணித்த 3 இளைஞர்கள் உயிரிழந்தனர்.

mancherial-bike-tipper-lorry-accident

மஞ்சீரியலில் இருந்து லக்செட்டிபேட்டை நோக்கி மூன்று இளைஞர்கள் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தனர். ஹாஜிப்பூர் மண்டலத்துக்கு உட்பட்ட குடிபேட்டா பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே, முன்னால் சென்ற டிப்பர் லாரியை முந்த முயன்றுள்ளனர்.

மருத்துவமனை ஆம்புலன்ஸ் போலீஸ் கொலை கத்திக்குத்து

அப்போது எதிரே வந்த பேருந்தைத் தவிர்க்க முயன்றபோது, மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து டிப்பர் லாரி மீது மோதியதாகக் கூறப்படுகிறது. இதில் சோஹைல் (21), அஃப்ரோஸ் (24) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த சித்தார்த் (21) மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவரும் உயிரிழந்தார்.

அதிவேகமே விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என போலீசார் முதற்கட்டமாகக் கருதுகின்றனர். சோஹைலின் சகோதரர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.