மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மாணவியை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்ற சம்பவம்... பரபரப்பு வீடியோ!
கர்நாடக மாநிலம் மங்களூருவில் உள்ள மருத்துவக் கல்லூரி வளாகத்திற்குள் மாணவி ஒருவர் வலுக்கட்டாயமாகத் தார் (Thar) வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பட்டப்பகலில் நடந்ததாகத் தெரிவிக்கப்படும் இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
मंगलुरु मेडिकल कॉलेज कैंपस से छात्रा के अपहरण का मामला, VIDEO वायरल! कर्नाटक के मंगलुरु में एक मेडिकल कॉलेज परिसर से छात्रा को कथित तौर पर जबरन थार गाड़ी में बैठाकर ले जाने का मामला सामने आया है घटना का वीडियो सोशल मीडिया पर तेजी से वायरल हो रहा है बताया जा रहा है कि छात्रा एक हिंदू युवक के साथ प्रेम संबंध में थी पुलिस ने मामला दर्ज कर छात्रा की तलाश शुरू कर दी है सवाल यह है कि आखिर दिनदहाड़े कॉलेज कैंपस में ऐसी घटना कैसे हुई? छात्रा की सुरक्षा और उसकी सुरक्षित बरामदगी सबसे जरूरी है। पुलिस जल्द से जल्द छात्रा को सुरक्षित बरामद करे और दोषियों के खिलाफ सख्त कानूनी कार्रवाई करे
— Sahil chabra (@sahii199) November 21, 2026
பாதுகாப்பு வசதிகள் உள்ள கல்லூரி வளாகத்திற்குள்ளேயே இத்தகைய சம்பவம் நிகழ்ந்துள்ளது மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், மாணவியைப் பாதுகாப்பாக மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
மாணவி இளைஞர் ஒருவருடன் காதல் உறவில் இருந்ததாகவும், அதன் பின்னணியில் இந்தச் சம்பவம் நடந்திருக்கலாம் என்றும் முதற்கட்டத் தகவல்கள் வெளியாகியுள்ளன.கல்லூரி வளாகத்திற்குள் நுழைந்து மாணவியை அழைத்துச் சென்ற நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்
