மாங்கனி திருவிழா.. இன்று காரைக்காலில் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.. குழந்தைப் பேறு கிடைக்க வழிபடும் முறைகள்!
இன்று ஜூன் 29ம் தேதி திங்கட்கிழமை மாங்கனி திருவிழாவையொட்டி காரைக்காலில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் காரைக்காலில் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கும், அரசு ஊழியர்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் முக்கிய அரசு அலுவலகங்கள், அரசு கருவூலங்கள் குறைந்த பணியாளர்களுடன் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக புதுவை அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “காரைக்காலில் உள்ள காரைக்கால் அம்மையார் கோயிலில் மாங்கனி திருவிழா 29ம் தேதி நடக்கிறது. பக்தர்கள் மாம்பழங்களை பொழியும் மங்களகரமான மாங்கனி திருவிழா நடைபெற உள்ளது.

காரைக்கால் அம்மையாளர் கோயில் மாங்கனி திருவிழாவை கொண்டாட, உள்ளூர் பக்தர்களும் திருவிழாவில் கலந்துக் கொள்ள வசதியாக காரைக்கால் பகுதிக்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. அரசு அலுவலகங்கள், நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் இந்த விடுமுறைக்கு ஈடாக ஜூலை 18-ம் தேதி சனிக்கிழமை செயல்படும் என தெரிவித்துள்ளார்.
