சோகம்... மாம்பழம் பறிக்கச் சென்றவர் மின்வேலியில் சிக்கி உயிரிழப்பு!

 
மாம்பழம் மாம்பழம்

ஸ்ரீகாளஹஸ்தி அருகே உள்ள தொட்டம்பேடு மண்டலம், கத்திவாரி கண்டிகை கிராமத்தைச் சேர்ந்தவர் 43 வயது கூலித்தொழிலாளி சிவாஜி. இவர் பசவண்ணகுன்டா பகுதியில் கூலிவேலை செய்து பிழைப்பு நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில், சிவாஜி தனது மகன் சுரேந்திராவுடன் கத்திவாரி கண்டிகை அருகே பசவண்ணகுண்டாவில் உள்ள ஒரு மாந்தோப்பிற்கு மாம்பழம் பறிப்பதற்காகச் சென்றுள்ளார்.

மின்வேலி

அப்பகுதியில் காட்டுப்பன்றிகளின் அட்டகாசம் அதிகமாக இருந்ததால், அவை தோட்டத்திற்குள் நுழைவதைத் தடுப்பதற்காக மாந்தோப்பின் உரிமையாளர் சட்டவிரோதமாக மின்வேலி அமைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. தோட்டத்தில் மின்வேலி அமைக்கப்பட்டிருந்த விபரத்தைக் கவனிக்காத சிவாஜி, அதனைச் சாதாரண கம்பி என நினைத்து கடக்க முயன்றுள்ளார். அப்போது அவர் மீது பலத்த மின்சாரம் பாய்ந்ததில், சிவாஜி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மகன் சுரேந்திரா அதிர்ஷ்டவசமாக இந்த விபத்திலிருந்து உயிர் தப்பினார்.

இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த புச்சிநாயுடு கண்டிகை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஹரிபிரசாத் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அப்பகுதியில் உடனடியாக மின்சாரத்தைத் துண்டித்தனர். இதையடுத்து சிவாஜியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஸ்ரீகாளஹஸ்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்துப் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.