"அதிமுகவுக்கு மிகப் பெரிய சரிவு" - மாணிக்கம் தாகூர் பேட்டி!

 
மாணிக்கம் தாகூர்

தமிழகத்தில் நடந்துமுடிந்த இடைத்தேர்தல் வெற்றி மற்றும் தற்போதைய அரசியல் சூழல் குறித்துத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பல முக்கியக் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

நாம் இதுவரை பார்த்த தேர்தல்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு, பணம், கறி விருந்து, மூக்குத்தி, கொலுசு போன்ற இலவசப் பொருட்கள் எதையும் வாக்காளர்களுக்குக் கொடுக்காமல் நேர்மையான முறையில் நடத்தப்பட்ட இடைத்தேர்தல் இதுவாகும் என்று அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

மாணிக்கம் தாகூர்

ஒரு சாமானிய மனிதன்கூட மக்கள் மத்தியில் நற்பெயர் பெற்று அதிகாரத்திற்கு வர முடியும் என்பதற்கு இந்தத் தேர்தல் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்றும் அவர் குறிப்பிட்டார்.

நடந்துமுடிந்த தேர்தலில் தவெக மூன்றாவது இடத்திலிருந்து முன்னேறிப் வலுவான இடத்தைப் பிடித்துள்ளதாகவும், திமுகவின் வாக்குகள் சற்று குறைந்துள்ளதாகவும் குறிப்பிட்ட அவர், பிரதான எதிர்க்கட்சியான அஇஅதிமுகவுக்கு இந்தத் தேர்தல் முடிவுகள் மிகப்பெரிய சரிவை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.