"தவெகவுக்கு எம்.பி வந்தால் மட்டுமே இண்டியா கூட்டணியில் இணைப்போம்" - மாணிக்கம் தாகூர் விமர்சனம்!
இந்தியா கூட்டணி குறித்தும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் குறித்தும் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ள கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன.
"இந்தியா கூட்டணி அழிந்துவிட்டது எனக்கூறி திமுக சாபம் விட்டு வெளியேறியது. திமுகவுடன் தேமுதிக, மக்கள் நீதி மய்யம் போன்ற கட்சிகள் விலகிய போதிலும், தற்போது வரை இக்கூட்டணியில் 23 கட்சிகள் உறுதியாக உள்ளன" என்று தெரிவித்துள்ளார்.

"தமிழக வெற்றிக் கழகத்திற்கு எம்.பி சீட் வந்து, அவர்கள் வெற்றி பெற்று எம்.பி-க்கள் வந்தால் மட்டுமே அவர்களை இந்தியா கூட்டணியில் நாங்கள் சேர்ப்போம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
"தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு முதலமைச்சராவதற்குத் தவெக தலைவர் விஜய், முதன்முதலில் ஆதரவு கேட்டதே காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் தான்" என்றும் மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்.
