மணிமுத்தாறு அருவியில் 4-வது நாளாக குளிக்கத் தடை!

 
மணிமுத்தாறு

 

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கான தடை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுள்ளது.

நெல்லை மணிமுத்தாறு அருவி

மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் மாஞ்சோலை வனப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக மணிமுத்தாறு அருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அருவியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. தடாகம் மற்றும் பாதுகாப்புப் பாலத்தையும் தாண்டி தண்ணீர் பாய்வதால் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மணிமுத்தாறு

அருவியைப் பார்க்க மட்டும் அனுமதி

சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு வனத்துறையினர் அருவியில் குளிக்கத் தடை விதித்துள்ளனர். நீர்வரத்து சீராகும் வரை இந்தத் தடை தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில், அருவியின் இயற்கை அழகைக் கண்டு ரசிக்க மட்டும் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அருவிப் பகுதியில் வனத்துறையினர் கண்காணிப்புப் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

எனவே, மணிமுத்தாறு அருவிக்குச் செல்லத் திட்டமிடும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி இல்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.