மணிப்பூர் முதல்வர் ராஜினாமா ... பரபரக்கும் அரசியல் வட்டாரம்!

 
பைரோன்சிங்


இந்தியாவில் 2023 மே மாதம் முதல் மணிப்பூரில் 2 பிரிவினர் இடையே மோதல் வெடித்து பெரும் கலவரமாகி தொடர்ந்து வருகிறது. இந்த கலவரத்தில்  நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்து உள்ளனர். பலர் மாயமாகியுள்ளனர்.  அங்கு முதல்வராக பொறுப்பில் இருந்த  பைரன் சிங்  கலவரத்தை தூண்டும் வகையில்  பேசியதாக ஒரு ஆடியோ ஒன்று வெளியானது. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என குக்கி இனத்தை சேர்ந்தவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையில், உச்ச நீதிமன்ற நீதிபதி, பைரன்சிங் பேசியதாக கூறப்படுவது அவருடைய குரல்தானா என்பதை ஆய்வு செய்ய மத்திய அரசின் தடவியல் சோதனை மையத்திற்கு அனுப்பி வைத்துள்ளது.  

பைரோன்சிங்


மணிப்பூரில் மொத்தம் உள்ள 60 சட்டமன்ற தொகுதிகளில்   31 இடங்களை பாஜக வென்றிருந்தது. அதுபோக, குக்கி மக்கள் முன்னணி கட்சியிலிருந்து 2  எம்எல்ஏக்கள், தேசிய மக்கள் கட்சியிலிருந்து 7 எம்எல்ஏக்கள், நிதிஷ்குமாரின்  கட்சி ஆதரவின் மூலம் தான்  பாஜக ஆட்சி செய்து வந்தது. இதில் குக்கி மக்கள் முன்னணி மற்றும் தேசிய மக்கள் கட்சி இரண்டுமே  தங்கள் ஆதரவை திரும்ப பெற்றன.
சொந்த கட்சியினரே பைரன்சிங் முதலமைச்சராக தொடர வேண்டாம் என தீர்மானித்ததாக அங்குள்ள அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  
 பிப்ரவரி 5ஆம் தேதி இது குறித்து  அமித்ஷாவை சந்திக்க டெல்லி பயணம் மேற்கொண்டார் பைரன் சிங். ஆனால், மணிப்பூர் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் ஒய். கெம்சந்த் மற்றும் மணிப்பூர் சட்டப்பேரவை சபாநாயகர் டி. சத்யபிரதா சிங் ஆகியோரை மட்டுமே அமித்ஷா சந்தித்ததாகவும் இவரை பார்க்க மறுத்ததாகவும் அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது. இனி பைரன் சிங், முதலமைச்சர் ஆக தொடரக்கூடாது என இன்று மணிப்பூர் சட்டமன்ற கூட்டத்தொடரில் நம்பிக்கை இல்லாத தீர்மானத்திற்கு  எதிர்க்கட்சிகள் ஏற்பாடு செய்து இருந்தன.  

மணிப்பூர்


இவ்வாறான தொடர் அழுத்தங்களை அடுத்து, நேற்று ஆளுநர் அஜய்குமார் பல்லாவிடம் தனது ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளார் இது குறித்து மணிப்பூர் முதல்வர்  பைரன் சிங்.  ” மணிப்பூர் மக்களுக்கு சேவையாற்ற கிடைத்த வாய்ப்பை பெருமையாக கருதுகிறேன். மத்திய அரசு எடுத்த முடிவுகள், செயல்பாடுகள் மணிப்பூரின் வளர்ச்சி பணிகளை காக்க செய்தது. அதற்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன். மத்திய அரசின் இந்த பணி தொடர வேண்டும்.” என  தனது ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இதனை  ஏற்றுக் கொண்ட ஆளுநர் அஜய்குமார் பல்லா, அடுத்த முதல்வரை தேர்வு செய்யும் வரை  பொறுப்பு முதல்வராக  இருக்கும்படி பைரன் சிங்கை வலியுறுத்தியுள்ளார். பைரன் சிங் ராஜினாமா செய்துவிட்டதால் இன்று நடைபெற இருந்த நம்பிக்கையில்லா தீர்மானம் செல்லாது என அறிவிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.  

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!