33 ஆண்டு கால பயணம் ... முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இன்றுடன் ஓய்வு!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங். இவர் 1991ம் ஆண்டு நரசிம்ம ராவ் ஆட்சியில் அஸ்ஸாம் மாநிலத்தின் சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றார் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிஙகடந்த 33 ஆண்டுகளாக மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகித்து வந்தார். இவர் இன்றுடன் ஓய்வு பெறுவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
கடந்த 1991 முதல் 2019 ம் ஆண்டு வரை அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்தும், 2019 ம் ஆண்டில் இருந்து தற்போது வரை ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்தும் மன்மோகன் சிங் மாநிலங்களவையில் உறுப்பினராக இருந்து வருகிறார். அவரது பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகிறது.
மன்மோகன் சிங் ஓய்வை தொடர்ந்து மாநிலங்களவையில் காலியாகும் ராஜஸ்தான் மாநிலத்துக்கான உறுப்பினராக காங்கிரஸ் கட்சியின் சார்பில் சோனியா காந்தி பதவியேற்கிறார். அந்த வகையில், சோனியா காந்தி முதல் முறையாக மாநிலங்களவை உறுப்பினராக பாராளுமன்றம் செல்லவிருக்கிறார். மன்மோகன் சிங் தவிர 9 மத்திய அமைச்சர்கள் மற்றும் 54 பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்றுடன் ஓய்வு பெறுவது குறிப்பிடத்தக்கது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!