துணி துவைத்து வாக்குச் சேகரித்த மன்சூர் அலிகான் !

 
mansoor mansoor

 

திருச்சி மாவட்டம் லால்குடி தொகுதியில் போட்டியிடும் நடிகர் மன்சூர் அலிகான், கல்லக்குடி பகுதியில் வித்தியாசமான முறையில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். ஊரணி பகுதிக்குச் சென்ற அவர், அங்கு துணி துவைத்துக் கொண்டிருந்த பெண்களுக்கு உதவி செய்யும் வகையில் அவர்களது துணிகளைத் துவைத்துக் கொடுத்து வாக்குக் கேட்டார். ஒவ்வொரு தேர்தலிலும் ஒரு தொகுதியைத் தேர்ந்தெடுத்துப் போட்டியிடுவது தனது வழக்கம் என்று கூறிய அவர், லால்குடி தொகுதியை ஒரு புண்ணிய பூமியாகவும், பாரம்பரியமிக்கத் தலைவர்கள் நடமாடிய மண்ணாகவும் வர்ணித்துப் பேசினார்.

நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்குப் பதிவு!

தேர்தல் பிரசாரத்தின் போது பேசிய மன்சூர் அலிகான், தான் எப்போதுமே சொந்தப் பணத்தைச் செலவு செய்துதான் தேர்தலில் நிற்பதாகவும், இது தனக்குப் பழகிப்போன ஒன்று என்றும் குறிப்பிட்டார். ஐந்து மற்றும் பத்து ஆண்டுகள் பதவியில் இருப்பவர்கள் தொகுதிக்கு எதையும் செய்யாமல் சுகபோகங்களை அனுபவித்துவிட்டுச் சென்றுவிடுவதாகக் குற்றம் சாட்டினார். தனக்கு ஒருமுறை வாய்ப்பளித்தால், லால்குடி தொகுதி மக்களின் உண்மையான வேலைக்காரனாக இருந்து பணியாற்றுவேன் என உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார்.

மன்சூர்

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதே தனது முக்கிய நோக்கம் எனத் தெரிவித்த அவர், இப்பகுதி விவசாயிகளின் நீண்டகாலக் கனவான வாழை மற்றும் நெல் கொள்முதல் நிலையங்களை அமைப்பேன் என உறுதி அளித்தார். காமராஜர் முதல் பெரியார் வரை மாட்டு வண்டியில் வந்து பிரசாரம் செய்த இந்த மண்ணில், மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றப் போவதாக அவர் கூறினார். மன்சூர் அலிகானின் இந்த அதிரடிப் பிரசாரத்தைக் காண அந்தந்த பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் திரண்டு வருகின்றனர்