பிரபல மராத்தி நடிகை மதூ காம்பிகர் காலமானார்! 73 வயதில் உயிரிழப்பு; லாவணி கலையில் தனி முத்திரை பதித்தவர்

 
மராத்தி

 

மும்பை: பிரபல மராத்தி நடிகையும், பாரம்பரிய லாவணி நடனக் கலைஞருமான மதூ காம்பிகர் (73), நீண்டகால உடல்நலப் பாதிப்பால் காலமானார். மகாராஷ்டிர மாநிலம் புனேவில் இன்று (அக்டோபர் 12) அவர் உயிரிழந்தார். அவரது மறைவு மராத்தி திரையுலகினரையும் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ज्येष्ठ अभिनेत्री मधु कांबीकर यांचं निधन, अभिनय आणि नृत्याने रसिकांची मनं जिंकणाऱ्या लावणी कलावंत हरपल्या

நடிப்பிலும் நடனத்திலும் தனி முத்திரை

நாடக மேடைகளில் தனது கலைப் பயணத்தைத் தொடங்கிய மதூ காம்பிகர், பின்னர் மராத்தி திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள் எனப் பல துறைகளில் முத்திரை பதித்தார். குறிப்பாக, மகாராஷ்டிரத்தின் பாரம்பரிய லாவணி நடனக் கலையைப் பிரபலப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றினார். ‘ஷாபித்’, ‘ஏக் ஹோதா விதூஷக்’, ‘ஜபாட்லேலா’, ‘டெபு’, ‘யேவு கா கராத்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்றார். இயல்பான நடிப்பாலும், கிராமப்புறப் பின்னணியைக் கொண்ட கதாபாத்திரங்களைச் சிறப்பாக வெளிப்படுத்தியதாலும் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.

Madhu Kambikar Passes Away: नाना पाटेकरांनंतर सिनेसृष्टीला आणखी एक मोठा धक्का, ज्येष्ठ अभिनेत्री मधू कांबीकर यांचं निधन - Marathi News | Madhu kambikar passes away at the age ...

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட கலைப் பயணம்

கடந்த 2016-ம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற லாவணி நிகழ்ச்சியின்போது மதூ காம்பிகருக்கு பக்கவாதம் ஏற்பட்டது. இதனால் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதுடன், தொடர்ந்து நடிப்பதிலும் மேடைகளில் நிகழ்ச்சி நடத்துவதிலும் சிரமம் ஏற்பட்டது. அவரது கலைப் பங்களிப்பைப் பாராட்டி, 2018-ம் ஆண்டு ஜீ சித்ர கௌரவ் விருதுகளில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. உடல்நலக் குறைவு காரணமாக அவரால் நேரில் பங்கேற்க முடியாததால், அவரது மருமகள் ஷீத்தல் ஜாதவ் விருதைப் பெற்றுக்கொண்டார். நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக மராத்தி சினிமா, நாடகம் மற்றும் நாட்டுப்புறக் கலைகளில் பங்களித்த மதூ காம்பிகரின் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.