விருதுநகர் மாரியம்மன் கோவில் பங்குனிப் பெருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலத் தொடக்கம்!

 
கொடியேற்றம்

 தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பங்குனிப் பொங்கல் வெகு சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. குறிப்பாக விருதுநகர் மாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழா பிரசித்தி பெற்றது.  அந்த வகையில் நடப்பாண்டு திருவிழாவிற்கு மார்ச் 17ம் தேதி சாட்டுதல் அறிவிப்பு செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்றிரவு பங்குனி பொங்கல் திருவிழா கொடியேற்றம் கோலாகலமாக நடைபெற்றது .  

பொங்கல்

சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஒன்று திரண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘ஆகோ, அய்யாகோ’ கோஷம் எழுப்பினர். நேர்த்திக் கடன் செலுத்தும் பக்தர்கள் இன்று காலை காப்பு கட்டி விரதத்தை தொடங்கியுள்ளனர்.  சாட்டுதல் அறிவிப்பு செய்யப்பட்ட நாள் முதல் தினமும் நூற்றுக்கணக்கான பெண்கள் கொடிமரத்திற்கு நேர்த்திக்கடனாக தண்ணீர் ஊற்றுவர்

மாரியம்மன் கோவில்

 அந்நிகழ்வு தற்போது நடைபெற்று வருகிறது. ஏப்ரல்7ல் பொங்கல் வழிபாடு, ஏப்ரல் 8 ல் அக்கினிச்சட்டி மற்றும் கயிறு குத்துதல், ஏப்ரல் 9ல் தேரோட்டம் நடைபெற உள்ளது.   ஏப்ரல் 14ம் தேதி தமிழ் புத்தாண்டுடன் பங்குனிப் பொங்கல் திருவிழா நிறைவு பெறுகிறது. பங்குனி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு விருதுநகர் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web