பிளஸ் 2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்...மே 13 முதல் பதிவிறக்கம் செய்யலாம்!

 
மதிப்பெண் சான்றிதழ் மதிப்பெண் சான்றிதழ்

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9:30 மணிக்கு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டன. தேர்வில் தேர்ச்சி பெற்ற மற்றும் தேர்ச்சி பெறாத மாணவர்கள் அனைவரும் உயர் கல்விக்கு விண்ணப்பிக்கத் ஏதுவாகத் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன. இந்தச் சான்றிதழ்களை வரும் மே 13-ம் தேதி முதல் மாணவர்கள் தங்களது பள்ளிகள் அல்லது இணையதளம் வாயிலாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

அரசு தேர்வுகள் இயக்ககம்

மாணவர்கள் தங்களது தற்காலிக மதிப்பெண் சான்றிதழைப் பெற அந்தந்தப் பள்ளிகளுக்கு நேரடியாகச் சென்றும் பெற்றுக் கொள்ளலாம். அல்லது டிஜிஇ (DGE) என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து தாங்களாகவே பதிவிறக்கம் செய்யும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. இந்தச் சான்றிதழ்கள் அசல் மதிப்பெண் சான்றிதழ் கிடைக்கும் வரை அனைத்து வகையான உயர் கல்விச் சேர்க்கைகளுக்கும் செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசு தேர்வுகள் இயக்ககம்

மேலும், விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பிப்பவர்கள் மற்றும் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்களுக்குத் தனித்தனியாகத் தேதிகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கான உடனடித் துணைத் தேர்வு குறித்த அறிவிப்புகளும் விரைவில் வெளியிடப்படும் எனத் தெரிகிறது. மாணவர்கள் இந்தத் தற்காலிகச் சான்றிதழ்களைக் கொண்டு கல்லூரிகளில் சேரத் தடையின்றி விண்ணப்பிக்கலாம் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்