திருமண உதவித்தொகை ரூ 5000/- ! தமிழக அரசு அதிரடி!

 
திருமண உதவித்தொகை ரூ 5000/- ! தமிழக அரசு அதிரடி!


தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையிலான பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. பட்ஜெட் மீதான விவாதத்தில் பல்வேறு அறிவிப்புக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சட்டப்பேரவையில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.

திருமண உதவித்தொகை ரூ 5000/- ! தமிழக அரசு அதிரடி!

அதில் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் 30 அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதன்படி
259 கல்லூரி விடுதிகளில் செம்மொழி நூலகம்’
259 கல்லூரி விடுதிகளுக்கு உடற்பயிற்சி கருவிகள் மற்றும் விளையாட்டு கருவிகள்
40 விடுதிகளுக்கு போட்டி தேர்வுகளுக்கான புத்தகங்கள்
259 கல்லூரி விடுதிகளில் மாணவ, மாணவிகளுக்குதனித்திறன் மற்றும் ஆங்கில பேச்சாற்றல் பயிற்சி


இயக்கங்கள் மற்றும் மாவட்ட அலுவலகங்களுக்கு IFHRMS கணினிகள் மற்றும் உபகரணங்கள்
பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவிகளுக்கான கல்வி உதவித்தொகை திட்டங்களுக்கான வருமான வரம்பு 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயாக உயர்வு
கல்வி உதவித்தொகை திட்டங்களின் கீழ் பயன்பெற முதல் தலைமுறை பட்டதாரிக்கு ஆவண செய்யப்படும்.

திருமண உதவித்தொகை ரூ 5000/- ! தமிழக அரசு அதிரடி!


கல்வி உதவித் தொகை திட்டங்களின் கீழ் வழங்கப்படும் உண்டி மற்றும் உறையுள் கட்டணங்கள் உயர்வு.
விடுதிகளில் பணிபுரியும் காப்பாளர்களுக்கு புத்தாக்க பயிற்சி
மாவட்ட அளவில் சிறந்த விடுதிகளுக்கு பரிசுகள்
20 கல்லூரி மாணவிகள் விடுதிகளுக்கு பயோ-மெட்ரிக் கருவிகள்
பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் விடுதிகளில் மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கான ஆண்டு வரம்பு 2 லட்சம் ரூபாயாக உயர்வு
விடுதிகளில் சிறப்பு பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்

திருமண உதவித்தொகை ரூ 5000/- ! தமிழக அரசு அதிரடி!


7 மாணவியர் விடுதிகளுக்கு சுற்றுச்சுவர்
விடுதி மாணவ, மாணவிகளுக்கான பல்வகை செலவினத் தொகை உயர்வு
234 பள்ளி கட்டிடங்களில் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு கழிவறை வசதிகள்
கள்ளர் பள்ளி கட்டிடங்களில் பழுது மற்றும் பராமரிப்புப் பணிகள்
15 கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளில் 9 ஆம் வகுப்பில் ஆங்கில வழிக்கல்வி வகுப்புகள்
அனைத்து கள்ளர் தொடக்கப்பள்ளிகளில் முதலாம் வகுப்பில் ஆங்கில வழியிலான வகுப்புகள்


கிராமப்புற மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்துக்கான வருமான வரம்பு 1 லட்சம் ரூபாயாக உயர்வு
நரிக்குறவர் மற்றும் சீர்மரபினர் நல வாரியங்களில் பதிவு பெற்ற உறுப்பினர் அல்லது குடும்பத்தினருக்கு வழங்கப்படும் திருமண உதவித்தொகை ஆண்களுக்கு 3,000 ரூபாயாகவும் பெண்களுக்கு 5,000 ரூபாயாகவும் உயர்த்தப்படும்


இலவச மின்மோட்டாருடன் கூடிய தையல் இயந்திரம், இலவச பித்தளை தேய்ப்புப் பெட்டி மற்றும் இலவச வீட்டுமனை வழங்கும் திட்டங்களுக்கான வருமான வரம்பு உயர்வு.
இலவச பித்தளை தேய்ப்புப் பெட்டிகளின் எண்ணிக்கை 3,000 ஆக உயர்வு
கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளில் 8 ம் வகுப்பு முதல் 11 ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மானவிகளுக்கு ஆங்கில பேச்சாற்றல் மற்றும் தனித்திறன் வளர்க்கும் பயிற்சி


2 பள்ளி விடுதிகள் கல்லூரி விடுதிகளாக நிலை உயர்த்தப்படும்.
2 விடுதிகளுக்கு சொந்த கட்டிடம்.
விடுதிகளுக்கான மளிகைப் பொருட்கள் தமிழ்நாடு ஒளிவுமறைவற்ற ஒப்பந்தப்புள்ளி சட்டத்தின்படி கொள்முதல்
சிறப்பாக செயல்படும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்களுக்கு விருதுகள்
விடுதி மாணவ, மாணவிகளுக்கு ‘கலைத் திருவிழா’
இடஒதுக்கீடு மற்றும் சமூகநீதி குறித்து ஒரு புத்தகம் வெளியிடப்படும் எனத் தெரிவித்துள்ளார்

From around the web