உளவியல் பாடம் ரீதியாக நடத்தப்பட்ட திருமணம்.. மெளனம் கலைத்த கல்லூரி பேராசிரியர்!

கொல்கத்தாவில் உள்ள மௌலானா அபுல் கலாம் ஆசாத் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் பெண் பேராசிரியர் ஒருவர் முதலாமாண்டு மாணவனை வங்காள முறைப்படி திருமணம் செய்து கொள்ளும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.இதைத் தொடர்ந்து, பல்கலைக்கழகத்தால் பேராசிரியரை கட்டாய விடுப்பில் அனுப்பியதுடன், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வந்தது.
பல்கலைக்கழகத்தில் நடத்தப்படவிருந்த ஒரு உளவியல் நாடகத்தின் நிகழ்ச்சிக்காக இந்த சம்பவம் படமாக்கப்பட்டது என்றும், நாடகத்திற்கான ஒத்திகைகள் பல்கலைக்கழகம் மற்றும் மாணவர்களின் ஒப்புதலுடன் நடத்தப்பட்டன என்றும் பேராசிரியர் விளக்கினார். பேராசிரியர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இது தொடர்பாக, அவர் கூறுகையில், “எனது சக ஊழியர்கள் இந்த ஒத்திகை வீடியோவை வேண்டுமென்றே கசியவிட்டனர். இதன் காரணமாக, எனது பெயருக்கு களங்கம் ஏற்பட்டதால் நான் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். எனவே, பல்கலைக்கழகத்துடனான எனது தொடர்பை இனி என்னால் தொடர முடியாது; "நான் எனது வேலையை ராஜினாமா செய்வதாக பல்கலைக்கழகத்திற்கு ஒரு மின்னஞ்சலையும் அனுப்பியுள்ளேன்" என்று கூறியுள்ளார்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!