செம... ஒட்டிப்பிறந்த பிரபல இரட்டை சகோதரிகளுக்கு திருமணம்... வைரல் புகைப்படங்கள்!

 
அபி பிரிட்டானி

 உலகில் அதிசய ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் அபி மற்றும் பிரிட்டானி. இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இவர்களின்  மணமகன் ஜோஷ் பவுலிங், ஒரு கால்நடை மருத்துவர். இவர்கள் 2021ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டிருக்கலாம் எனட் தெரிகிறது.  அமெரிக்காவில்   ஒட்டிப்பிறந்த இரட்டையர்களான அபி மற்றும் பிரிட்டானி இருவருக்கும் முகம், நுரையீரல், முதுகு தண்டுவடம், இதயம், வயிறு என அனைத்துமே தனித்தனி தான்.

அபி பிரிட்டானி

அபி பிரிட்டானி

ஆனால்  இருவருக்கும் சேர்த்து கை மற்றும் கால்கள் இரண்டு மட்டுமே.  இவர்களின் இருவரின் சிந்தனைகள், திறமை, பொழுதுபோக்கு  என அனைத்துமே வேறு வேறு தான். இருவரும் தனித்தனியாகவே எழுதுகிறார்கள், படிக்கிறார்கள், உணவருந்துவர்.  தனித்தனியாக கார் ஓட்டி தனித்தனியாக  ஓட்டுநர் உரிமம் வைத்துள்ளனர்.  2012ம் ஆண்டு  கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு பள்ளியில் குழந்தைகளுக்கு கணிதம் சொல்லி கொடுக்கும் பணியை செய்து வருகின்றனர். பாடம் எடுப்பது, வகுப்பை கவனிப்பது என தனித்தனியாக செய்து வருகின்றனர்.

அபி பிரிட்டானி

அபி பிரிட்டானி

அபி பிரிட்டானிஎல்லாமே தனித்தனி தான் ஆனால் இருவருக்கும் சேர்த்து ஒரே ஊதியம் மட்டுமே தரப்படுகிறது என்கின்றனர் இந்த சகோதரிகள்.   தற்போது இருவரும் சேர்ந்து கால்நடை மருத்துவரை மணந்து கொண்டதில் மகிழ்ச்சியாக இருப்பதாகத் தெரிகிறது. உலகம் முழுவதும்  பல்வேறு தரப்பில் இருந்து இவர்களுக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்..  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web