கசந்து போன திருமண வாழ்க்கை.. கல்யாணம் ஆகி சில நாட்களிலேயே புது மாப்பிள்ளை தற்கொலை!

 
அருண்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த சுனாமி குடியிருப்பு மீனவர் காலனியை சேர்ந்தவர் குணசேகரன். இவரது மகன் அருண் (வயது 25). பூம்புகார் அருகே 24 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு அந்த பெண்ணை தரங்கம்பாடி கடற்கரையில் திருமணம் செய்து கொண்டார். பின்னர் இருவரும் வேளாங்கண்ணிக்கு வந்து தனியார் விடுதியில் தங்கினர்.

அப்போது இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர் இரவு மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வேளாங்கண்ணி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்து கொண்டவர் மீது பூம்புகார் காவல் நிலையத்தில் 3 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இருவரும் தனியார் ஹோட்டலில் அறை எடுக்கும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web