மேஷத்தில் இணையும் சூரியன் - செவ்வாய்... கோடிகளைக் குவிக்கப் போகும் 3 ராசிகள்!

 
புதாதித்ய யோகம் புதன் சூரியன் புதாதித்ய யோகம் புதன் சூரியன்

ஜோதிட சாஸ்திரத்தின்படி, கிரகங்களின் இடமாற்றம் மற்றும் சேர்க்கை மனித வாழ்க்கையில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும். அந்த வகையில், வரும் மே 11, 2026 அன்று ஒரு மிக முக்கியமான வானியல் நிகழ்வு நிகழவுள்ளது. நவகிரகங்களின் ராஜாவான சூரியனும், கிரகங்களின் தளபதியான செவ்வாயும் சுமார் 2 ஆண்டுகளுக்குப் பிறகு மேஷ ராசியில் ஒன்றாக இணையவுள்ளனர்.

சூரியன் அதிகாரம், தன்னம்பிக்கை மற்றும் ஆளுமைத் திறனின் சின்னம். செவ்வாய் வீரம், வேகம் மற்றும் அதிரடிச் செயல்பாடுகளின் சின்னம். இந்த இரு நெருப்பு கிரகங்கள் மேஷ ராசியில் இணைவது 'ஆதித்ய மங்கள யோகத்தை' உருவாக்கி, சில ராசிக்காரர்களின் தலைவிதியையே மாற்றப்போகிறது.

செவ்வாய்

மேஷம்: சொந்த ராசியிலேயே இந்தச் சேர்க்கை நடப்பதால், மேஷ ராசிக்காரர்களுக்கு இது பொற்காலமாக அமையப்போகிறது. புதிய வீடு, நிலம் அல்லது வாகனம் வாங்கும் கனவு நனவாகும். நிதி நிலைமை முன்பை விடப் பல மடங்கு உயரும். வராத கடன்கள் வசூலாகும். வேலையில் இருப்பவர்களுக்குப் புதிய பொறுப்புகளும், அங்கீகாரமும் கிடைக்கும். கடின உழைப்பிற்கு ஏற்ற பதவி உயர்வு தேடி வரும். கணவன் - மனைவி இடையே புரிதல் அதிகரித்து, குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

சிம்மம் : சிம்ம ராசியின் அதிபதியே சூரியன் என்பதால், இந்தச் சேர்க்கை உங்களுக்கு ராஜயோகத்தை வழங்கும். நீண்ட நாட்களாக இருந்த பொருளாதாரச் சிக்கல்கள் தீரும். சேமிப்பு அதிகரிக்கும். வேலையின் காரணமாகவோ அல்லது உயர் கல்விக்காகவோ வெளிநாடு செல்ல முயற்சிப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். புதிய கிளைகளைத் தொடங்க இதுவே சரியான தருணம். தடைபட்ட சுப காரியங்கள் கைகூடும், இதனால் மன ஆரோக்கியம் மேம்படும்.

சூரியன் குரு

துலாம்: துலாம் ராசிக்காரர்களுக்கு இந்தத் தருணம் "அதிர்ஷ்ட தேவதை" கதவைத் தட்டுவது போல இருக்கும். நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி நிச்சயம். தொட்டது துலங்கும் காலம் இது. புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். சம்பள உயர்வு மற்றும் போனஸ் கிடைக்க வாய்ப்புள்ளது. தகுதிக்கேற்ற வேலை தேடுபவர்களுக்குச் சிறந்த நிறுவனங்களில் இருந்து அழைப்பு வரும். நீண்ட கால உடல்நலப் பாதிப்புகள் நீங்கி, சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள்.