வைரல் வீடியோ... தண்ணீரில் பாக்சிங் விளையாட்டு... மகா கும்பமேளாவில் புனித நீராடிய மேரி கோம்… !

 
மேரிகோம்


இந்தியாவில் உத்திரப்பிரதேச மாநிலத்தில் பிரயாக்ராஜில்   கங்கை, யமுனை, சரஸ்வதி ஆறுகள் ஒன்று கூடும் திரிவேணி சங்கமம். இதனை மகா கும்பமேளாவாக 45 நாட்கள் கொண்டாடப்பட்டு வருகிறது.  மகா கும்பமேளாவானது 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும். மிகப்பெரிய முழு கும்பமேளாவாகும்.

இந்த மகா கும்பமேளா ஜனவரி 12ம் தேதி தொடங்கி பிப்ரவரி 26ம் தேதி மகா சிவராத்திரி வரை நடைபெற உள்ளது.
தினமும் லட்சக்கணக்கானோர் நீராடி வருவதால் இதற்காக விரிவான  பாதுகாப்பு நடவடிக்கைகள், தேசிய, மாநிலம் மீட்பு படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அரசு சார்பில் மக்களின் வசதிக்காக நாடு முழுவதும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மகா கும்பமேளாவில் ஒலிம்பிக் குத்துச்சண்டை வீரர் மேரி கோம் கலந்துகொண்டு புனித நீராடியுள்ளார்.   அவர் நீரில் நின்று கொண்டே பாக்சிங் செய்து காட்டி  விளையாடினார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பல லட்சம் பார்வையாளர்களை பெற்றுள்ளது.  

மேரிகோம்


மகா கும்ப மேளாவில் கலந்து கொண்ட மேரிகோம்  ” இந்த மகா கும்பமேளா உலக தரம் வாய்ந்த யாத்திரையாக மாறியுள்ளது. இது ஒரு நல்ல அனுபவமாக உள்ளது. ஏற்பாடுகள் மிகவும் சிறப்பாக இருக்கிறது. இத்தகைய உலகத்தரம் வாய்ந்த ஆன்மீக யாத்திரையை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் சிறப்பாக செய்துள்ளனர் அவர்களுக்கு நன்றி. நான் ஒரு கிறிஸ்தவராக  இருப்பினும் இந்த ஆன்மீக நிகழ்விற்கு எனது ஆதரவை தெரிவிக்க இங்கு வந்தேன்” எனப் பதிவிட்டுள்ளார்.  

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web