நாளை மாசி திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்... திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள்!

 
மாசி

நாளை திருச்செந்தூரில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இன்று காலை முதலே திருச்செந்தூரில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். முருகனின் ஆறுபடை வீடுகளில் இயற்கை எழில் கொஞ்சும் கடற்கரை ஓரம் இடத்தில் 2ம் படை வீடாக அமைந்திருக்கிறது திருச்செந்தூர். ஆறு படைவீடுகளில் திருச்செந்தூர் மட்டுமே கடற்கரையோரத்தில் அமைந்துள்ளது. மற்ற 5 அறுபடைவீடுகளும் மலைகளின் மீது தான் அமைந்துள்ளது. இதனால் திருச்செந்தூர் கோவில் தனிச்சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. திருச்செந்தூர் முருகன் கோவிலில் வருடத்தின் எல்லா நாட்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

திருச்செந்தூர்

உற்சவங்களும், திருவிழாக்களும்  களைகட்டும். அந்த வகையில் மாசித் திருவிழா மிக முக்கிய திருவிழாவாகக் கருதப்படுகிறது. தொடர்ந்து 12 நாட்கள் திருவிழாவில் பெரிய தேரில் சுவாமியும், தெய்வானையும் வலம் வருவதைக் காண உலகம் முழுவதும் இருந்து ஏராளாமான பக்தர்கள் வருகை தருவர். மாசித் திருவிழா நாளை பிப்ரவரி 14 ம் தேதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

நாளை அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகம் நடைபெறும். தொடர்ந்து 4.30 மணிக்கு திருக்கோயில் செப்பு கொடிமரத்தில் திருவிழா கொடியேற்றப்படும்.  5ம் நாளில் அதாவது பிப்ரவரி 18 ம் தேதி இரவு 7.30 மணிக்கு குடவருவாயில் தீபாராதனையும், 20 ம் தேதி  அதிகாலை 4.30 மணிக்கு அருள்மிகு சண்முகபெருமானின் உருகு சட்டசேவை நிகழ்ச்சியும் காண கண்கோடி வேண்டும்.  

திருச்செந்தூர்

நாளை காலை  8.45 மணிக்கு ஆறுமுகப்பெருமான் வெட்டி வேர் சப்பரத்தில் பக்தர்களுக்கு தரிசனம் தந்து  பிள்ளையன்கட்டளை மண்டபத்தை வந்தடைவார்.  இதற்கான விழா ஏற்பாடுகள், பக்தர்களுக்கான பாதுகாப்பு இவைகளுக்கு கோவில் நிர்வாகம், மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து ஏற்பாடுகளை செய்து வருகிறது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web