திருப்பதியில் பக்தர்களுக்கு மாஸ்க் கட்டாயம்... தேவஸ்தானம் அதிரடி!
Updated: Jan 8, 2025, 15:13 IST
இந்தியாவில் எச்எம்பிவி பரவல் கர்நாடகாவில் கண்டறியப்பட்டதை அடுத்து பெங்களூருவில் வீட்டை விட்டு வெளியில் வரும் போது மாஸ்க் அணிந்து வர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
அதே போல் தமிழகத்தில் முகக்கவசம் அணிந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் எச்.எம்.பி.வி. தொற்று பரவலை தொடர்ந்து திருப்பதி வரும் பக்தர்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
எச்.எம்.பி.வி. தொற்று பரவலை தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பக்தர்கள் மாஸ்க் அணிந்து வர வேண்டும் என அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு வேண்டுகோள் விடுத்துள்ளார். சொர்க்கவாசல் திறப்புக்கு அதிக பக்தர்கள் வரக்கூடும் என்பதால் மாஸ்க் கட்டாயம் அணிய அறிவுறுத்தப்பட்டு இருப்பதாக திருப்பதி தேவஸ்தானம் விளக்கம் அளித்துள்ளது.
From
around the
web