சவுதி அரேபியாவில் கச்சா எண்ணெய் கிடங்கில் பயங்கர தீ விபத்து!

 
சவுதி அரேபியா எண்ணெய் கிடங்கில் தீவிபத்து

சவுதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தில் உள்ள கச்சா எண்ணெய் கிடங்கு ஒன்றில் திடீரெனப் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ள நிலையில், இது ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதலா என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏமனில் அரசுப் படையினருக்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நீண்டகாலமாக உள்நாட்டுப் போர் நிலவி வருகிறது. இதில் அரசுப் படைக்குச் சவுதி அரேபியாவும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரானும் ஆதரவளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

சவுதி அரேபியா கச்சா எண்ணெய் கிடங்கில் தீ விபத்து

சவுதி அரேபியாவின் ரியாத்தில் உள்ள முக்கியக் கச்சா எண்ணெய் கிடங்குகளில் திடீரெனப் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அங்குப் பற்றி எரியும் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்தத் தீ விபத்து தற்செயலாக ஏற்பட்டதா அல்லது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய ஏவுகணை அல்லது ஆளில்லா விமானத் தாக்குதலா என்பது குறித்துச் சவுதி அரேபிய அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.